இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் கடந்த 2 வருடங்களாகக் கல்லூரியில் இருந்து பட்ட படிப்பை முடித்து வெளியேறும் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்காமல் இருந்த வேளையில், ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட டிசிஎஸ் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சர்வதேச அளவில் ஐடி சேவை துறையில் பெரும் மாற்றங்கள் நடந்து வரும் வேளையில், இந்தியா தொடர்ந்து புதிய வர்த்தகத்தை பெறுவது மட்டும் அல்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் அதிகப்படியான ஊழியர்களை உருவாக்கி அனைத்து மாற்றத்திற்கும் தயாராகியுள்ளது.

இந்த நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் காலாண்டில் மட்டும் 5,452 புதிய ஊழியர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 6,06,998 ஆக உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து நடப்பு நிதியாண்டில், TCS சுமார் 40,000 புதிய பட்டதாரிகளை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரியில் பட்டம் பெரும் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் என்ற அச்சத்தைப் போக்கும் வகையில் TCS நிறுவனத்தின் தலைமை மனிதவள மேலாண்மை அதிகாரி (CHRO) மிலிந்த் லக்கட் முக்கியமான விளக்கத்தையும் ஜூன் காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பம் பணி சூழலை மாற்றியமைத்தாலும், TCS ஊழியர்கள் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வதில் வல்லுநர்கள் என்று அவர் உறுதிப்படுத்தினார். இதேபோல் உலக நாடுகளுக்கு இந்தியா முக்கிய திறன் மையமாக இருப்பதால் இதில் எவ்விதமான மாற்றமும் எதிர்காலத்தில் இருக்காது என தெரிவித்தார்.
மேலும், TCS நிறுவனம் ஊழியர்களுக்கு 4.5% முதல் 7% வரை சம்பள உயர்வை வழங்கியுள்ளது. சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு 10-12% வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மிலிந்த் லக்கட் தெரிவித்தார்.
இதோடு மட்டுமல்லாமல், TCS நிறுவனத்தின் 'எலிவேட் ரன்வே' (Elevate Runway) திட்டம் ஐடி ஊழியர்களின் புதிய தொழில்நுட்பத்தை கற்கும் பாதை வேகமெடுத்துள்ளது, இதன் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளது, மேலும் இளநிலை ஊழியர்களின் (ஜூனியர் ஊழியர்கள்) தொழில் வளர்ச்சியை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
மேலும், TCS நிறுவனத்தின் நடுத்தர நிலை ஐடி பணியாளர்களுக்கான 'டிரான்ஸ்ஃபர்மேஷன்' (MLT) திட்டம், நிறுவனத்திற்குள் புதிய தொழில்நுட்ப பணிகளை ஏற்றுக்கொள்ளச் சந்தைக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள ஊழியர்களுக்கு உதவுகிறது என்றும் மிலிந்த் லக்கட் தெரிவித்தார்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஏஐ வந்தாலும் இந்திய ஐடி துறையும், இந்திய ஐடி ஊழியர்களையும் அசைக்க முடியாது என்பதை மிலிந்த் லக்கட் பேச்சு கூறுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications