அண்ணே வரார் வழிவிடுங்கோ.. அதிரடியாய் களமிறங்கும் டாடா.. பிளிங்கிட், Zepto-வுக்கு ஷாக்..!

டாடா குழுமத்திற்கு சொந்தமான பிக் பேஸ்கட் நிறுவனம் ஸெப்டோ மற்றும் பிளிங்கிட் ஆகிய தளங்களுடன் போட்டி போடுவதற்கு மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தியாவில் தற்போது குவிக் காமர்ஸ் எனப்படும் மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை உடனடியாக டெலிவரி செய்யக்கூடிய செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொது மக்களும் இவற்றை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் டாடாவுக்கு சொந்தமான பிக் பேஸ்கட் நிறுவனம் நீண்ட காலமாக இந்த சந்தையில் இருந்தாலும் ஸெப்டோ மற்றும் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது குயிக் காமர்ஸ் பிரிவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. எனவே இவற்றுடன் போட்டி போடும் வகையில் பிக்பேஸ்கட் நிறுவனம் மிக தீவிரமாக தயாராகி வருவது தெரிய வந்துள்ளது.

அண்ணே வரார் வழிவிடுங்கோ.. அதிரடியாய் களமிறங்கும் டாடா.. பிளிங்கிட், Zepto-வுக்கு ஷாக்..!

எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் பிக்பேஸ்கட் நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 600 இடங்களில் தங்களுடைய டார்க் ஸ்டோர் எனப்படும் சிறிய அளவிலான கிடங்குகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த டார்க் ஸ்டோர்கள் பெரிய கிடங்குகளோடு இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் டெலிவரிக்கு தேவைப்படும் காலம் கணிசமான அளவு குறையுமென்றும் சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் பிக் பேஸ்கட் நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 60 இடங்களில் மிகப்பெரிய கிடங்குகளை வைத்திருக்கிறது.

இவற்றுக்கு துணையாக 600 டார்க் ஸ்டோர்களை அமைப்பதற்கான பணிகளை பிக் பேஸ்கட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இருந்து சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் என்ற விற்பனை அளவை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தற்போதைய சூழலில் பிக் பேஸ்கட் நிறுவனத்தின் ஸ்டோர் கீப்பிங் யூனிட் அளவு என்பது 10,000ஆக இருக்கிறது. கூடிய விரைவில் இந்த எண்ணிக்கையை 25,000 முதல் 30,000 வரை உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இது தொடர்பாக பிக் பேஸ்கட் நிறுவனத்தின் துணை நிறுவனரான விபுல் பரேக் மற்றும் மேனன் ஆகியோர் எக்கனாமிக் டைம்ஸ்க்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் தங்களுடைய நிறுவனம் வரும் காலங்களில் முழுக்க முழுக்க குயிக் காமர்ஸ் துறையில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறது என தெரிவித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு பிக் பேஸ்கட் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த நிறுவனம் தன்னுடைய செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் குயிக் காமர்ஸ் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+