இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றாக விளங்கும் டாடா குழுமம் ஆன்லைன் வர்த்தக துறையில் இறங்க வேண்டும் என்பதற்காகச் சீன அலிபாபா-வின் அதீத முதலீட்டில் இயங்கும் பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 64.3 சதவீத பங்குகளைச் சுமார் 1.3 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களுக்குமான ஒப்பந்தம் செய்யப்பட்டு நீண்ட காலம் ஆன பின்பும், சீன முதலீடுகள் மற்றும் வெளியேற்றத்திற்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்குத் தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில் டாடா - பிக் பேஸ்கட் மத்தியிலான பங்கு விற்பனை ஒப்பந்தம் தற்போது CCI அமைப்பிடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களுக்கும் அதிகப்படியான நன்மைகள் உள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
பிக்பேஸ்க்ட் தற்போது பெரிய தொகைக்கு ஒவ்வொரு வருடமும் வர்த்தகம் செய்தாலும், இந்நிறுவனம் பெரு நகரங்களைத் தாண்டி தனது வர்த்தகக்தை விரிவாக்கம் செய்ய முடியவில்லை.
டாடாவின் லாபம்
இந்நிலையில் டாடா தலையீடு இந்நிறுவனத்தை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அதிகளவிலான ஊழியர்களைப் பலத்தையும், முதலீட்டையும் அளிக்க முடியும்.
பிக்பேஸ்கட் வெற்றி
ஆன்லைன் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விற்பனையில் நீண்ட காலமாக இருக்கும் பிக்பேஸ்கட், முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் சில வருடங்களுக்கு முன்பு இப்பிரிவில் இறங்கி மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. ஆனால் பிக்பேஸ்கட் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது.
டாடாவின் உதவி
ஆனால் இந்த வெற்றி அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்குள் ஜியோமார்ட் மற்றும் அமேசான் இந்நிறுவனத்தை இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் டாடா உடனான கூட்டணி மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை தேடித் தருவது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய வளர்ச்சியையும் அளிக்கும்.
பிக்பேஸ்கட் வர்த்தகம்
பிக்பேஸ்கட் இப்பிரிவில் நீண்ட காலமாக இருப்பதால் வர்த்தக விரிவாக்கம் என்பது பெரும் பிரச்சனையாக இருக்காது, இதேவேளையில் ஏற்கனவே பிக்பேஸ்கட் செயலியை 34 மில்லியன் மக்கள் டவுன்லேடு செய்து 26 நகரங்களில் வர்த்தகம் செய்து வருகிறது. இது அனைத்தும் டாடாவிற்கு மிகப்பெரிய லாபம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications