ரூ1500க்கு பொருள் வாங்கினால் ரூ1000 கேஷ்பேக்: பிக் பஜார் அறிவிப்பால் அலைமோதும் மக்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரீடைல் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த பியூச்சர் குரூப்-ன் பிக் பஜார் நிறுவனம் வர்த்தகம் இல்லாமல் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் தான் தனது நிறுவனத்தை மொத்தமாக விற்பனை செய்துவிடலாம் எனத் திட்டமிட்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் உடன் ஒப்பந்தம் செய்தது.

 

இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக அமேசான் வழக்கு தொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து இழுத்துக்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிக் பஜார் தனது வர்த்தகத்தை மேம்படுத்த அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. சில நாட்களுக்கு ஆன்லைன் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற திட்டமிட்டு 2 மணிநேரம் டெலிவரி சேவையை அறிமுகம் செய்தது.

சாமனியர்கள் இனி நினைக்க மட்டும் தான் முடியும் போல.. மீண்டும் தொடர் ஏற்றத்தில் தங்கம்..!

இந்தத் தேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்தச் சூப்பர் ஆஃபரை அறிவித்து மக்களைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

பியூச்சர் குரூப்-ன் பிக் பஜார்

பியூச்சர் குரூப்-ன் பிக் பஜார்

பியூச்சர் குரூப் தலைமையிலான பிக் பஜார் Nation's Biggest Offer என்ற பெயரில் மே 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான காலத்திற்கு 1500 ரூபாய்க்குப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1000 ரூபாய்க்கு கேஷ்பேக் சேவையை அளிக்கிறது. இதுமட்டும் அல்லாமல் இந்த ஆஃபருக்கும் 2 மணிநேர டெலிவரி சேவையை அளிக்கிறது பிக் பஜார்.

கேஷ்பே கட்டாயம்

கேஷ்பே கட்டாயம்

இந்தச் சலுகையைப் பெர மக்கள் பிக் பஜார் ஆப் வாயிலாகவோ அல்லது shop.bigbazaar.com இணையதளம் வாயிலாகவோ பெறலாம் எனக் கிஷோர் பியானியின் பிக் பஜார் தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் கேஷ்பேக் கிடைக்கும் அளவிற்குப் பிக் பஜார் இந்தச் சலுகை திட்டத்தை உருவாக்கியுள்ளது.

150 நகரங்களில் பிக் பஜார்
 

150 நகரங்களில் பிக் பஜார்

இந்தியாவில் சுமார் 150 நகரங்களில் பிக் பஜார் வர்த்தகம் செய்து வரும் வேளையில் மக்களுக்கு மிகவும் சிறப்பான முறையில் சேவை அளிக்க முடியும். இதனால் லாக்டவுன் காலத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட பிக் பஜார் வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.

2 மணிநேரத்தில் டெலிவரி

2 மணிநேரத்தில் டெலிவரி

நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் ஆன்லைன் ஆர்டர்களை விரைவாக டெலிவரி செய்ய முடியாமல் தவித்து வரும் வேளையில் பிக் பஜார் ஸ்மார்ட்டாகத் திட்டமிட்டு 2 மணிநேரத்தில் பொருட்களை டெலிவரி செய்வது மட்டும் அல்லாமல் 1500 ரூபாய் பொருட்களுக்கு 1000 கேஷ்பேக் அளிக்கிறது.

1500 பொருட்கள் விலை

1500 பொருட்கள் விலை

இதேபோல் 'Har Din Lowest Price' என்ற திட்டத்தின் கீழ் மக்கள் தினமும் பயன்படுத்தும் 1500 பொருட்களின் விலையை மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாக உத்தரவாதம் அளித்துள்ளது. இது அனைத்துக் குடும்பங்களுக்கு ஜாக்பாட் என்றால் மிகையில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big Bazaar launches 'nation's biggest offer': Shop for Rs 1,500 to get Rs 1,000 cashback

Big Bazaar launches 'nation's biggest offer': Shop for Rs 1,500 to get Rs 1,000 cashback
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X