உலகின் அனைத்து பெரிய பொருளாதார, உற்பத்தி நாடுகளும் தற்போது அமெரிக்காவுக்கான மாற்று சந்தையை தேடி வருகிறது. இந்த முயற்சியின் பாதையில் இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவில் கையெழுத்திட உள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த டெக்ஸ்டைல், இன்ஜினியரிங் பொருட்கள், நகைகள், கெமிக்கல், உணவு பொருட்கள் என அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
இதேபோல் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கும் பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படும், இதில் மிகவும் முக்கியமானது கார்கள். ஐரோப்பிய பிராண்ட் கார்களுக்கு இந்தியாவில் எப்போதும் ஒரு மதிப்பு அதன் தரத்தின் மீதும், பர்பாமென்ஸ் மீதும் உள்ளது. இந்த நிலையில் இந்திய FTA ஒப்பந்தத்திர்காக ஐரோப்பிய கார்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை 110 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த வரி குறைப்பு இந்திய சந்தையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை 360 கோணத்திலும் பார்க்கலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய சந்தையை வெளிநாட்டு கார் உற்பத்தியாளர்களுக்கு பெரிய அளவில் திறக்கும் மிக முக்கியமான நடவடிக்கையாகும். இந்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27, 2026) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முன்பு மோடி அரசு கொடுக்கப்போகும் சர்ப்ரைஸாக இது இருக்கும். மேலும் இதை இதுவரையில் இந்தியா செய்துள்ள அனைத்து விதமான ஒப்பந்தத்திற்கும் தலையாய ஒப்பந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் வரி குறைப்பு விவரங்கள்
இந்திய அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு உடனடியாக வரியை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியானாலும், இதில் சில கட்டுப்பாடுகள் உள்ளது. அதாவது 15000 யூரோக்கள் மதிப்புக்கு மேல் உள்ள கார்களுக்கு மட்டுமே இந்த வரி குறைப்பு பொருந்தும். மேலும் 15000 யூரோ என்பது 16 லட்சம் ரூபாய்.
இது முதலில் 40 சதவீதமாக இருக்கும், பின்னர் காலப்போக்கில் 10 சதவீதமாக குறையும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரி குறைப்பு மூலம் வோல்க்ஸ்வாகன், மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற ஐரோப்பிய கார் நிறுவனங்களுக்கு இந்திய சந்தையில் குறைவான விலைக்கு கிடைக்கும்.
விலை தாக்கம் மற்றும் சேமிப்பு
வரி குறைப்பால் ஐரோப்பிய கார்களின் விலை கணிசமாக குறையும். உதாரணமாக, ஐரோப்பாவில் ரூ.50 லட்சம் கொண்ட ஒரு கார் முன்பு ரூ.1.1 கோடிக்கு மேல் விற்கப்பட்டது. இப்போது ரூ.75 லட்சம் முதல் ரூ.85 லட்சம் விலைக்கு விற்பனைக்கு வரலாம். இதனால் கார் வாங்குபவர்கள் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சேமிக்கலாம். இது உயர்தர கார்களை விரும்பும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் ஜாக்பாட் ஆக இருக்கும்.
விற்பனை மற்றும் சந்தை பங்கு
தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு 44 லட்சம் கார் விற்பனையாகும் சந்தையில் ஐரோப்பிய நிறுவனங்கள் 4 சதவீதத்திற்கும் குறைவான பங்கு மட்டுமே கொண்டுள்ளன. சுசுகி மோட்டார் (மாருதி), டாடா, மஹிந்திரா போன்ற உள்நாட்டு மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் மூன்றில் 2 பங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்த வரி குறைப்பால் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், ஆடி, ஸ்கோடா போன்ற பிராண்டுகளின் விற்பனை கணிசமாக உயரும். ஆண்டுக்கு 40,000 கார்கள் விற்கும் இந்த பிராண்டுகள் சில ஆண்டுகளில் 60,000ஐ தொடலாம். 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் 60 லட்சம் கார்கள் விற்கப்படும் சந்தையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு கார் நிறுவனங்களுக்கு சவால்
இந்த வரி குறைப்பு டாடா, மஹிந்திரா, மாருதி போன்ற உள்நாட்டு நிறுவனங்களுக்கு பெரும் பிரச்சனையாக மாறும். உள்நாட்டு நிறுவனங்கள் இனி வரும் காலக்கட்டத்தில் விலை, அம்சங்கள் மற்றும் மதிப்பு அடிப்படையில் மாற்று சிந்தனையை முன்வைக்க வேண்டிய கட்டாயம் வரும்.
வெளிநாட்டு கார்கள் மலிவாக கிடைப்பதால் போட்டி அதிகரிக்கும். இருப்பினும், ஐரோப்பிய நிறுவனங்கள் முதலில் இறக்குமதி கார்களை மலிவாக விற்று சந்தையை சோதனை செய்யலாம், பின்னர் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் தான் டாடா, மஹிந்திரா, மாருதி போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் போட்டிக்கு தயாராக வேண்டிய காலக்கட்டம்.
இந்தியாவின் நிலைப்பாடு
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக உள்ளது. ஆனால் உள்நாட்டு தொழிலை பாதுகாக்க 70 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது மத்திய அரசு. டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் இதை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தாலும் வரியை குறைப்பதில் எவ்விதமான தளவும் அளிக்காத மத்திய அரசு FTA ஒப்பந்தம் வாயிலாக புதிய பாதையை திறக்க உள்ளது.
பங்குச்சந்தை பாதிப்பு
கார்களுக்கான வரி குறைப்பு கார் விற்பனையை தாண்டி இது இந்திய கார் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தையும் பாதிக்கும். ஐரோப்பிய கார்கள் வெளிநாட்டில் இருந்து குறைவான வரியில் இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய கார்களின் விற்பனை சரியும். இதன் மூலம் கார் நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரியும்.
இதை தொடர்ந்து ஐரோப்பிய கார்கள் முதல்கட்டமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் இந்தியாவில் இருக்கும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும், மூலப்பொருட்கள் சப்ளை நிறுவனங்கள் என பல அடுக்குகளில் பாதிப்பு ஏற்படும்.
இதன் தாக்கம் செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் தெரியும்.
27 நாடுகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 27 நாடுகளின் பட்டியல்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ் குடியரசு, செக்கியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications