பிரதமர் மோடி ஆட்சியைப் பிடித்த 2014ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தாலும், வளைகுடா நாடுகள் தனது வர்த்தகத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை செய்த காரணத்தால் கச்சா எண்ணெய் விலை வேகமாகக் குறைந்தது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது மிகப்பெரிய சவாலே கச்சா எண்ணெய் தான், இது மோடி அரசுக்கு மிகவும் சாதகமாக அமைந்த நிலையில் விலைவாசி குறைந்தது மட்டும் அல்லாமல் அதிகளவிலா வரி வருமானத்தை இப்போது வரையில் பெற்று வருகிறது.
தற்போது 2014ஆம் ஆண்டுக்கு பின்பு மீண்டும் கச்சா எண்ணெய் விலை 91 டாலரை தாண்டியது.
5 மாநில தேர்தல்
கச்சா எண்ணெய் தற்போது மீண்டும் உச்சத்தைத் தொட்டு உள்ளது. நவம்பர் மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்கிறது, 5 மாநில தேர்தல் மற்றும் முடிவுகள் வெளியாகும் வரையில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
தேர்தல் முடிவுக்குப் பின்
ஆனால் தேர்தல் முடிவுக்குப் பின் கட்டாயம் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயர்த்த வேண்டிய நிலை வரும். கொரோனா தொற்றில் இருந்து மீண்டும் வரும் இந்திய சந்தைக்குப் புதிய விலை உயர்வு மிகப்பெரிய சுமையாக இருக்கும்.
மோடி அரசு
இந்நிலையில் மோடி அரசு இதை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு சந்தையை எப்படி மீட்டு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரஷ்யா - உக்ரைன்
கச்சா எண்ணெய் விலை ரஷ்யா - உக்ரைன் எல்லை பிரச்சனை காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை பாதித்துள்ளது. இதேவேளையில் OPEC நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாகச் சொன்னாலும் பல்வேறு காரணத்தால் குறித்த அளவிற்கு உற்பத்தி செய்யாமல் உள்ளது.
நைஜீரியா - லிபியா
இந்நிலையில் நைஜீரியாவில் ஆயில் சூப்பர் டேங்கரில் தீவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் பல நூறு டன் கச்சா எண்ணெய் வீணாகியுள்ளது. இதேபோல் லிபியாவில் 6 துறைமுகத்தில் பருவநிலை காரணமாக ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ள நிலையில் கச்சா உற்பத்தியும் விநியோகம் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் இதன் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இன்று கச்சா எண்ணெய் சந்தையில் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 91.85 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 92.60 டாலர்.


Click it and Unblock the Notifications