இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கைக் குழுவின் 2 நாள் கூட்டம் இன்று (ஏப்ரல் 5) முடிந்து காலை 10 மணிக்குக் கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிக்க உள்ளார். இக்கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றத்தையும் அறிவிக்காவிட்டால் 7வது முறையாக அதாவது 14 மாதமாக வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும்.
கோடை காலம் துவங்கிய நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுவிற்கு மழை பற்றாக்குறை மற்றும் வெப்ப அலைகள் குறித்த பிரச்சனைகளோடு போராட வேண்டியிருக்கும். மழை பற்றாக்குறை மற்றும் வெப்ப அலைகள் நாட்டின் உற்பத்தியைப் பாதிக்கும், குறிப்பாக விவசாய உற்பத்தி அதிகளவில் பாதிக்கும்.

வெப்ப அலைகளின் அச்சுறுத்தல்: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கடும் வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மத்திய மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கும்.
இதன் காரணமாக, வேளாண்மை பொருளாதாரம், விவசாய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். இதனால் காய்கறிகள் மற்றும் தானியங்களின் விலை உயர்வு போன்ற பணவீக்க அழுத்தங்களை ஏற்படுத்தும். இதை இந்த கூட்டத்தில் ஆர்பிஐ எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பது முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும்.
ரிசர்வ் வங்கியின் இலக்கு: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், பணவீக்கத்தை 4 சதவீத இலக்குக்குக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது ஆர்பிஐ-யின் பணவீக்க டார்கெட்டான 4-6 சதவீதத்தில் 4 சதவீதம் என்பது லோவர் லிமிட் ஆகும்.
பணவீக்கத்தின் தற்போதைய நிலை: பிப்ரவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் இருந்த போதிலும், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றைத் தவிர்த்துப் பிற முக்கிய பொருட்களின் விலைவாசி அதாவது core inflation குறைந்து வருகிறது, இது நாட்டின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தது.
ஆனால், பருவநிலை மாற்றங்கள் பணவீக்கத்தையும், பொருளாதார நிலைத்தன்மையையும் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த கவலைகள் ஆர்பிஐ கூட்டத்தில் கட்டாயம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான பொருளாதார வளர்ச்சி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் நாட்டின் ஜிடிபி GDP வளர்ச்சி 8 சதவீதத்தைத் தாண்டி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, இன்று மார்ச் காலாண்டு வளர்ச்சி விகிதத்தை ஆர்பிஐ அறிவிப்பது மட்டும் அல்லாமல், 2025ஆம் நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வளர்ச்சிக் கணிப்பில் மேல்நோக்கிய திருத்தம் செய்யப்படும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னதாக, ரிசர்வ் வங்கி 2025ஆம் நிதியாண்டுக்கு GDP வளர்ச்சியை 7 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்தது.
பணவீக்கம்: பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் ரீடைல் பணவீக்கம் சற்று குறைந்து 5.09 சதவீதமாக இருந்தாலும், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் விலை உயர்வு காரணமாக மார்ச் மாதத்தில் இது 5.2 சதவீதமாக சற்று அதிகரிக்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
ஜூன் காலாண்டில் மழை பற்றாக்குறை மற்றும் வெப்ப அலைகள் இருக்கும் காரணத்தால் வேளாண்மை பொருளாதாரம், விவசாய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். இதனால் காய்கறிகள் மற்றும் தானியங்களின் விலை உயர்வு போன்ற பணவீக்க அழுத்தங்களை ஏற்படுத்தும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications