நவம்பர் மாதம் துவங்கியாச்சு, மாதத்தின் முதல் நாளே மத்திய அரசு வர்த்தக சிலிண்டர் விலையை 100 ரூபாய் வரையில் உயர்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதை தொடர்ந்து நவம்பர் மாதம் சில முக்கியமான நிதி மற்றும் நிதியியல் தொடர்பான முக்கிய மாற்றங்கள், காலக்கெடு முடிய உள்ளது.

இந்த மாற்றங்கள் உங்கள் நிதி நிலைமையை பாதிக்கும் வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் இதை அறிந்துக்கொண்டு சாமானிய மக்கள் உரிய நடவடிக்கை எடுப்பது உத்தமம். நிதியியல் துறையில் நடக்கும் மாற்றங்களை பற்றி தெரியாமல் பணத்தை இழப்பதை விடவும், அதை தெரிந்துக்கொண்டு அதற்கேற்ப நடந்துக்கொள்வது தான் சரியாக இருக்கும்.
ஜீவன் பிரமான் லைப் சர்டிஃபிகேட் : ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், தங்களின் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு தங்களின் வருடாந்திர ஆயுள் சான்றிதழான ஜீவன் பிரமான் பத்ரா-வை நவம்பர் 30 ஆம் தேதி வரையில் ஓய்வூதியத்திற்காக சமர்ப்பிக்கலாம்.
ஐடிபிஐ வங்கி வைப்பு நிதி : ஐடிபிஐ வங்கி தனது சிறப்பு வைப்பு நிதி திட்டமான Amrit Mahotsav திட்டத்தை நவம்பர் 30 வரையில் நீட்டியுள்ளது. இந்த திட்டம் 375 நாட்கள் மற்றும் 444 நாட்கள் முதிர்வு காலத்துடன் 7.15 சதவீத வட்டி விகிதத்துடன் வருகிறது. இதுவே மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்தால் 7.65 சதவீதம் வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது.
ஹெச்டிஎப்சி மூத்த குடிமக்கள் நலன் திட்டம் : இந்தியாவின் வங்கியாக உருவெடுத்துள்ள ஹெச்டிஎப்சி மூத்த குடிமக்களை குறிவைத்து கூடுதலான 0.25 சதவீத வட்டி வகிதத்துடன் வைப்பு நிதி சேவையை அளிக்கிறது. இது ஏற்கனவே அனைத்து வங்கிகளிலும் அளிக்கப்படும் 0.50 சதவீத வட்டி விகிதத்திற்கு மேல் கூடுதலாக 0.25 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கிறது. இந்த திட்டத்தின் பெயர் HDFC senior citizen Care FD இத்திட்டத்தில் முதலீடு செய்ய கடைசி நாள் நவம்பர் 7 ஆம் தேதி.
ஜிஎஸ்டி : நவம்பர் 1 ஆம் தேதி முதல் தேசிய தகவல் மையத்தின் (NIC) அறிவுரை படி 100 கோடி ரூபாய் வரையிலான விற்றுமுதல் கொண்ட வர்த்தகங்கள் 30 நாட்களுக்குள் ஈ-இன்வாய்சிங் தளத்தில் ஜிஎஸ்டி பில்களை அப்லோடு செய்ய வேண்டும். இந்த முடிவை ஜிஎஸ்டி அமைப்பு செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்தது.
லேப்டாப் : வெளிநாட்டில் இருந்து HSN 8741 பிரிவுக்கு கீழ் லேப்டாப், டேப்லெட், பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்த அக்டோபர் 30 வரையில் தளர்வுகள் கொடுக்கப்பட்டது. நவம்பர் 1 ஆம் தேதிக்கு பின்பு என்ன நடக்கும் என மத்திய அரசு இதுவரையில் அறிவிக்கவில்லை, இதனால் இன்று இந்த தளர்வுகள் தொடருமா அல்லது நிறுத்தப்படுமா என்பது தெரிய வரும்.
மும்பை பங்குச்சந்தை: அக்டோபர் 20 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஈக்விட்டி டெரிவேட்டிவ் வர்த்தகம் மீதான பரிமாற்ற கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த கட்டணம் முக்கியமாக எஸ் அண்ட் பி சென்செக்ஸ் ஆப்ஷன்-க்கு வர உள்ளதால் கூடுதல் கட்டணம் மூலம் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளனர்.


Click it and Unblock the Notifications