மாத சம்பளதாரர்கள் கவனத்திற்கு.. ஏப்ரல் 1 முதல் சம்பளத்தில் ஏற்பட உள்ள மாற்றங்கள்.. !

நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது மூலமாக வருங்கால வைப்பு நிதி அதிகமாகவும், சம்பளம் குறைவாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த திட்டம் அமல்படுத்துவது மூலமாக ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் புதிய தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

என்னென்ன மாற்றங்கள்

என்னென்ன மாற்றங்கள்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட New Wage Code Bill மசோதா மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, Dearness Allowance, Travel Allowance மற்றும் House Rent Allowance அனைத்தும் மாற்றப்படும். புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, Dearness Allowance, பயணப் படி மற்றும் ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் என அனைத்தும் 50%க்கு மேல் இருக்காது. இதனால் உங்களது சேமிப்பு அதிகரிக்கும். ஆனால் டேக் ஹோம் ஊதியம் குறையும்.

அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் (Basic Salary)

அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் (Basic Salary)

புதிய தொழிலாளர் விதியின் படி, அடிப்படை சம்பளத்தின் பங்கு 50% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சம்பள பங்கு 50%-க்கு குறைவாக இருந்தால் அவை விரைவில் மாறிவிடும், மேலும் உங்களது அடிப்படை சம்பளத்துடன் சிடிசி (CTC) மேலும் அதிகரிக்கும். பல நிறுவனங்களும் அடிப்படை சம்பளத்தினை மிகக் குறைவாக கொடுத்து, மற்றவற்றை அதிகமாக கொடுக்கின்றன. இதனால் ஊழியர்களின் டேக் ஹோம் ஊதியம் அதிகமாக உள்ளது. ஆனால் சேமிப்பு என்பது குறைவாக உள்ளது. இதனால் இனி பிஎஃப் தொகை என்பது அதிகரிக்கும்.

பிஎஃப் தொகை அதிகரிக்கும்

பிஎஃப் தொகை அதிகரிக்கும்

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின் Take Home Salary குறைவாக இருக்கும். ஏனெனில் உங்களது அடிப்படை சம்பளம் 50%-க்கு கீழ் இருக்கும் போது, அந்த சம்பளத்தில் தான் 12 + 12 = 24 சதவீதம் உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு மாற்றப்படும். தற்போது அடிப்படை சம்பளத்தில் பிஎஃப் 12% உள்ளது. ஆனால் இனி அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் போது உங்களது பிஎஃப் தொகையும் அதிகரிக்கும். இதனால் வருங்கால வைப்பு நிதிக்கு செல்லும் தொகை அதிகரிக்கும்.

1 ஆண்டுக்கு பின்னர் கிராஜ்விட்டி

1 ஆண்டுக்கு பின்னர் கிராஜ்விட்டி

புதிய தொழிலாளர் சட்டங்களில் கிராஜ்விட்டியின் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே இருந்த விதிகளின் படி 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி 1 ஆண்டு பணிபுரிந்தாலே கிராஜ்விட்டி வழங்கப்படும்.

சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

7th Pay Commission: 2021 ஏப்ரல் 1 முதல் புதிய ஊதியக் குறியீடு மசோதா அமல்படுத்தப்பட்ட பின்னர், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கக்கூடும். இந்த சட்டங்களின் படி, உங்களது Take Home Salary குறையும், ஆனால் பிஎஃப் மற்றும் கிராஜ்விட்டியின் பங்களிப்பு அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் நீண்ட காலத்திற்கு பயன் பெறலாம். இது உங்களுக்கு தற்போதைக்கு சிரமமாக தோன்றினாலும், பிற்காலத்தில் மிக நல்ல விஷயமாக தோன்றலாம். அதிலும் மிகப்பெரிய அளவில் சம்பளம் வாங்குபவர்களுக்கு டேக் ஹோம் சம்பளம் வெகுவாக குறைய வாய்ப்பிருக்கிறது.

பிஎஃப் வரி சலுகையில் மாற்றம்

பிஎஃப் வரி சலுகையில் மாற்றம்

கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021ல் பழைய விதிமுறைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தது எனலாம். ஒரு புதிய திருத்தத்தினை கொண்டு வந்தது. அதன் படி ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும். பொதுவாக இந்த திட்டம் வரி சலுகை உண்டு என்பதால் தான் பலரையும் ஈர்க்கிறது. ஆக சம்பளதாரர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்படலாம்.

இனி இவர்கள் ITR செய்ய தேவையில்லை

இனி இவர்கள் ITR செய்ய தேவையில்லை

பட்ஜெட்டில் மூத்த குடிமக்கள், அதாவது 75 வயது அல்லது அதற்கு அதிகமாக வயதுடைய மூத்த குடிமக்கள், பென்ஷன் மற்றும் வங்கி வட்டி வருமானம் மட்டுமே வருடாந்திர வருமானமாக இருக்கும்பட்சத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை. எனினும் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மற்ற ஏதேனும் ஒரு வகையில் வருமானம் ஈட்டும் மூத்த குடிமக்களுக்கு இது பொருந்தாது.

Array

Array

வருமான வரி தாக்கலை அதிகரிக்க பட்ஜெட்டில் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் ஆகியவற்றை பற்றி அறிவிக்கப்பட்டது. இதுவும் ஏப்ரல் 1,2021 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புதியதாக வருமான வரி சட்டத்தில் 206AB மற்றும் 206CCA என்ற புதிய பிரிவுகள் அமலுக்கு வரவுள்ளன. இதன் படி வருமான வரி தாக்கல் செய்யாத நபர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 50,000 ரூபாய் டிடிஎஸ்(TDS) அல்லது டிசிஎஸ் (TCS) விலக்கு பெற்றிருந்தால், டிடிஎஸ்(TDS) அல்லது டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

விடுமுறை பயண சலுகை (LTC cash voucher scheme)

விடுமுறை பயண சலுகை (LTC cash voucher scheme)

மத்திய அரசு ஊழியர்களுக்கு நெருக்கடியான இந்த நேரத்தில் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், அரசு ஊழியர்களுக்கான எல்டிசி கேஷ் வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பயணம் செய்து பெறும் கொடுப்பனவை, பயணம் செய்யாமலேயே பணமாக பெறலாம். இந்த தொகையினை மார்ச் 31, 2021-க்கு முன் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊழியர்கள் இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை பெற செலவழிக்க வேண்டும் என்பது தான். இந்த திட்டமானது மார்ச் 31வுடன் முடிவடையவுள்ளது. ஆக ஊழியர்களை இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முன் கூட்டியே செய்ய வேண்டியதில்லை

முன் கூட்டியே செய்ய வேண்டியதில்லை

வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது சம்பள வருமானம், வங்கி கணக்கு, வரி செலுத்திய தகவல், டிடிஎஸ் விபரம் ஆகியவை முன்கூட்டியே பதிவிட்டு இருக்கும் நிலையில், தற்போது மூலதன ஆதாயங்கள், டிவிடெண்ட் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி வருமானம், போஸ்ட் ஆபீஸ்-ல் இருந்து கிடைத்த வருமானம் ஆகியவற்றையும் நேரடியாக வருமான வரி அறிக்கையில் சேர்க்கப்படும். ஆக அவற்றை துல்லியமாக இருப்பதை வருமான வரி செலுத்துவோர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+