அமெரிக்க பொருளாதார மந்தநிலை – ஊதிய உயர்வை குறைத்த இந்திய நிறுவனங்கள்!!

அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை காணப்படுவதால் பல்வேறு டெக் நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருக்கின்றன. அன்றாடம் ஒரு நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக நாம் செய்திகளில் பார்க்க முடிகிறது. அதேபோல பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு உள்ளிட்டவற்றையும் நிறுத்தி வைத்துள்ளன.

அமெரிக்காவில் மட்டுமல்ல இந்திய நிறுவனங்களும் இதே பாணியை கையில் எடுத்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் ஐடி மற்றும் கன்சல்டிங் நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களையே தங்கள் வருமானத்திற்காக சார்ந்து இருக்கின்றன. அமெரிக்க பொருளாதார மந்த நிலை இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களையும் பாதிக்க தொடங்கி இருக்கிறது.

அமெரிக்க பொருளாதார மந்தநிலை – ஊதிய உயர்வை குறைத்த இந்திய நிறுவனங்கள்!!

மிண்ட் செய்தித்தாளில் வெளியாகியிருக்கும் செய்தி அடிப்படையில் இந்தியாவின் Big four என அழைக்கப்படும் கேபிஎன்ஜி(kpmg), ஈஒய் (EY) , டெலாய்ட் (delloite) , பிடபிள்யூசி (pwc) ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவற்றை குறைத்திருப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த நான்கு நிறுவனங்களும் இந்தியாவை சேர்ந்த மிகப்பெரிய கன்சல்டிங் நிறுவனங்களாக இருக்கின்றன. உலகளவில் ஐடி துறையில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலை இந்த நான்கு நிறுவனங்களையும் பாதித்திருக்கிறது.

டெலாய்ட் நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான தங்கள் நிறுவனத்தின் பதவி உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 5000 பேருக்கு பதவி உயர்வு வழங்கிய இந்த நிறுவனம் இந்த ஆண்டு அதனை 4000 ஆக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு 105 பேருக்கு எக்சிகியூட்டிவ் டைரக்டர்களாக பதவி உயர்வு பெற்ற நிலையில் இந்த ஆண்டு 70 பேருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல ஈஒய் நிறுவனமும் கடந்த ஆண்டு 124 பேருக்கு பதவி உயர்வு வழங்கிய நிலையில் இந்த ஆண்டு அதனை குறைத்து இருக்கிறது. இந்நிறுவன அதிகாரிகள் மிண்ட் செய்திதாளுக்கு அளித்துள்ள பேட்டியில் தங்களுடைய வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் சந்தை செயல்பாடு ஆகியவற்றைப் பொறுத்துதான் புதிதாக வேலை ஆட்களை தேர்வு செய்வது மற்றும் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ,பதவி உயர்வு ஆகியவற்றை வழங்குவதை தீர்மானிக்கும் என தெரிவித்திருக்கிறது.

இந்த ஆண்டு இந்த நான்கு நிறுவனங்களிலும் ஊதிய உயர்வு விகிதம் 7 முதல் 9 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஊதிய உயர்வின் போது வெளிப்புற சந்தையில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்களையும் கருத்தில் கொள்வோம் என கேபிஎம்ஜி நிறுவனம் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறது. அதாவது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தான் ஊதிய உயர்வு , பதவி உயர்வு உள்ளிட்டவற்றை நாங்கள் தீர்மானிப்போம் என அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தியாவின் Big five என அழைக்கப்படும் ஐந்து ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் ,இன்போசிஸ், விப்ரோ, ஹெசிஎல், டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களும் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த அளவு ஊதிய உயர்வை வழங்கவில்லை. அமெரிக்காவின் நிலவும் பொருளாதார மந்த நிலையும் டிரம்பின் வர்த்தக மோதல்களும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+