சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிக்கையில், இந்தியர்களின் மாத சம்பளம் வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியர்களின் வருமான நிலை மற்றும் வேலைவாய்ப்புத் தரத்தில் ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றத்தை தெளிவாகக் காட்டுகிறது. நாட்டில் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் சராசரி மாத ஊதியம் ரூ.4,565 அதிகரித்துள்ளது. அதேசமயம், தினசரி வேலை செய்யும் சாதாரண தொழிலாளர்களின் சராசரி தினசரி ஊதியம் ரூ.139 அதிகரித்துள்ளது.
மொத்தமாக ஆறு ஆண்டுகளில் இந்தியா 17 கோடி வேலைவாய்ப்புகளைச் சேர்த்துள்ளதாகவும், இந்த வருமான உயர்வுகள் அதிகரித்த வேலை வாய்ப்புகள், நிலையான வேலை, மேம்பட்ட வேலை தரம் ஆகியவற்றை காட்டுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

சம்பளம் மற்றும் தினசரி கூலியில் உயர்வு: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சம்பளம் வாங்கும் ஊழியர்களின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது
வழக்கமான சம்பளத் தொழிலாளர்: ஜூலை-செப்டம்பர் 2017 காலகட்டத்தில் ரூ.16,538 ஆக இருந்த அவர்களின் சராசரி மாத வருமானம், ஏப்ரல்-ஜூன் 2024-இல் ரூ.21,103 ஆக அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட ரூ.4,565 உயர்வு ஆகும்.
சாதாரண தினக்கூலித் தொழிலாளர் : இதே காலகட்டத்தில், பொதுப்பணிகள் தவிர இவர்களின் சராசரி தினசரி ஊதியம் ரூ.294-இல் இருந்து ரூ.433 ஆக உயர்ந்துள்ளது. இது ரூ.139 உயர்வு ஆகும்.
வேலைவாய்ப்பில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள்: நாட்டில் வேலையின்மை விகிதம் (Unemployment Rate) கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது. 2017-18ல் 6.0% ஆக இருந்த விகிதம், 2023-24ல் 3.2% ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது. இளைஞர் வேலையின்மை விகிதம் கூட 17.8% இலிருந்து 10.2% ஆகக் குறைந்து, உலகளாவிய சராசரியை விடக் குறைவாக உள்ளது.
வேலைவாய்ப்பு முறைப்படுத்தல்: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சேரும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் 61.12 லட்சமாக இருந்த நிகர சந்தாதாரர்கள் எண்ணிக்கை, 2024-25 ஆம் ஆண்டில் 1.29 கோடிக்கும் அதிகமாகச் சேர்ந்துள்ளனர். இது நாட்டின் பணியாளர் வர்க்கம் முறைப்படுத்தப்பட்டு, சமூகப் பாதுகாப்பு பெறுவதைக் காட்டுகிறது.
சுயதொழில் வளர்ச்சி: வேலை செய்யும் முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் 52.2% ஆக இருந்த சுயதொழில் (Self-Employment) செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை, 2023-24 ஆம் ஆண்டில் 58.4% ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், சாதாரண தினக்கூலிகள் (Casual Labourer) 24.9% இலிருந்து 19.8% ஆகக் குறைந்துள்ளனர். இது மக்கள் தொழில்முனைவோர் மற்றும் சுய தொழில் செய்வதற்கு அடித்தளமாக அமைகிறது.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 47.5 கோடியாக இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 64.33 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஆறு ஆண்டுகளில் நிகரமாக 16.83 கோடி வேலைகள் அதிகரித்துள்ளன.
பொருளாதாரத்தின் உண்மையான வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மட்டும் முழுமையாகப் படம்பிடிக்க முடியாது. வேலைவாய்ப்பு போன்ற பெரிய குறிகாட்டிகளைக் கருத்தில் கொள்ளும்போதுதான் சரியான படம் வெளிப்படும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி வலுவாகவும், வேலை வாய்ப்புகள் ஆரோக்கியமான வழியிலும் வளர்வதைக் காட்டுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications