2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட லென்ஸ்கார்ட் நிறுவனம் குறுகிய காலத்திலேயே கண் கண்ணாடி (Eyewear) தொழிலில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. இகாமர்ஸ் மற்றும் விற்பனை நிலையங்கள் ஆகிய இரு வழிகளிலும் இந்நிறுவனம் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. லென்ஸ்கார்ட் நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கண்ணாடி தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மொத்தம் 2,500க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 2,000 கடைகள் உள்ளன.
மேலும் இந்நிறுவனம் மூலோபாய கையகப்படுத்துதல்களையும் செய்துள்ளது. குறிப்பாக ஏஐ அடிப்படையிலான விஷன் ஸ்டார்ட்அப் நிறுவனமான டேங்கோ ஐ மற்றும் பிரான்ஸை சேர்ந்த கண்ணாடிகள் பிராண்டான லு பெட்டிட் லுனெட்டியரில் கணிசமான பங்குகளை கொண்டுள்ளது.

லென்ஸ்கார்ட் முதலீட்டாளர்கள் நீண்ட காலமாக ஐபிஓவில் களம் இறங்கும் எண்ணத்தில் இருந்தனர். ஆனால் லென்ஸ்கார்ட் நிறுவனர் பெயுஷ் பன்சால், கடந்த இரண்டாண்டுகளில் இரண்டாம் நிலை ஒப்பந்தங்களை நடத்தினர். இதனால் முதலீட்டாளர்கள் பணப்புழக்கத்திற்காக பங்குகளில் பகுதியளவு விற்பனை செய்ய முடிந்தது.
இந்நிலையில் லென்ஸ்கார்ட் நிறுவனம் தற்போது புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்துக்குள் பங்குச் சந்தை அமைப்பிடம் ஐபிஓவுக்கான வரைவு ஆவணங்களை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26ம் நிதியாண்டின் இறுதிக்குள் லென்ஸ்கார்ட் நிறுவனம் ஐபிஓவை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் பொதுச் சந்தையில் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் நுழைய உள்ளது.
சர்வதேச விரிவாக்கம் மற்றும் ஐபிஓ திட்டமிடலுக்கு மத்தியில், லென்ஸ்கார்ட் நிறுவனம் லாபத்தை நோக்கி செயல்பட்டு வருகிறது. இழப்புகளை குறைத்துந நிலையான வருவாய் வளர்ச்சியை எட்டி வருகிறது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.10 கோடியாக குறைந்துள்து.
2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.64 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. கடந்த நிதியாண்டில இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 43 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.5,428 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் எபிட்டா 2 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.856 கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications