இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும் முக்கிய துறையாக இருப்பது மட்டும் அல்லாமல் பல லட்சம் நடுத்தர குடும்பங்களை பொருளாதார அளவிலும், வாழ்விலும் மேம்படுத்திய முக்கியமான துறைகளில் ஒன்று இந்திய ஐடி துறை (India IT Sector).
இத்துறையில் நடக்கும் ஒவ்வொரு மாற்றமும் பொருளாதாரத்திலும் (Economy), வர்த்தகத்திலும் (Business environment) குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஐடி துறையின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது என்றால் மிகையில்லை. இப்படியிருக்கையில் இந்திய ஐடி துறையில் 2023 துவங்கியதில் இருந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த சில மாதத்தில் டெக்னாலஜி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பெரிய திட்டங்களை ரத்து செய்தது, தற்காலிகமாக நிறுத்தியது போன்றவை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு முடிவையும் பார்த்து பார்த்து மிகவும் கவனமாக எடுத்து வருகிறது.
இது மட்டும் அல்லாமல் இந்திய ஐடி துறையில் தற்போது வர்த்தக இழப்பு காரணமாக கடுமையான வர்த்தக சவால்களையும், வருமானத்தில் நிலையற்ற தன்மையையும் எதிர்கொண்டு வருகிறது. இது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊழியர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகை அளிப்பதில் பல அதிரடியான முடிவுகளை எடுத்தது, இது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
இன்போசிஸ் நிறுவனம் மார்ச் காலாண்டில் ஏற்பட்ட வருமான சரிவுக்கு பெரிய ஒப்பந்தம் ரத்தானதை காரணமாக கூறியதை மறக்க முடியாது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் டிசிஎஸ் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான டிரான்ஸ்அமெரிக்கா நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பாதியிலேயே இழந்தது. இதன் எதிரொலி அடுத்த காலாண்டு முடிவில் எதிரொலிக்கும்.
இதுகுறித்து சந்தை ஆய்வாளர்கள் கூறுகையில், பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் இதுபோன்ற பெரிய ஐடி திட்டங்களை இழப்பதெல்லாம் வெறும் எப்போதாவது நடக்கும் விஷயம். இந்த சம்பவம் வாயிலாக ஐடி நிறுவனங்கள் இனி வரும் காலத்தில் பெரிய திட்டங்களை போது கூடுதல் கவனத்துடன் கையாளும்.
தற்போது சந்தை நிலவரத்தின் படி ஐடி நிறுவனங்கள் சிறிய திட்டங்கள் அல்லது குறுகிய காலம் கொண்ட திட்டங்களை பெற்று அதனை பின்நாளில் கால நீட்டிப்பு செய்யும் வாய்ப்பை தேடும் பணியில் இறங்கும் என ஆவுட்சேர்சிங் வல்லுனரான பிரதீக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் பெரிய மற்றும் நீண்ட கால திட்டம் அனைத்தும் அதிகப்படியான தள்ளுபடி உடன் வரும், இறுதிக்கட்டத்தில் தான் அதிக லாபம் பெறும் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது சர்வதேச வர்த்தக சந்தையில் முதலீடு மற்றும் செலவு செய்யும் அளவீடு நிலையற்றதாக இருக்கும் காரணத்தால் 5 வருட ஒப்பந்த காலம் கொண்ட திட்டத்தை பெறுவதில் அதிக வகனம் செலுத்தும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications