இந்தியாவின் டாப் பணக்கார குடும்பமான அம்பானிகள் இப்போது மிகவும் குஷியில் உள்ளனர். ஆம் அவர்களது குடும்ப உறவுக்கு மற்றுமொரு புதிய வரவு ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தின் மூலம் வரவிருக்கிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் இந்தத் திருமணத்தின் மூலம் அம்பானி குடும்பமும், மெர்ச்சன்ட் குடும்பமும் இணைகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இருப்பினும் அம்பானி குடும்பத்துடன் உறவு வைக்கப்போகும் புதிய பரம்பரை காரணமாக ஏற்கெனவே உறவு வைத்துள்ள பிரபல தொழில்குடும்பங்கள் பற்றிய பேச்சு நிச்சயமாக இருக்கத்தானே செய்யும்.

மிட்டல்கள்: முகேஷ் அம்பானியின் மருமகள் இஷேதா சல்கோகர் நெக்ஸு மொபிலிட்டியின் நிறுவனரான அதுல்யா மிட்டலை மணந்தார். அதுல்யா மிட்டல் ஸ்டீல் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் மருமகனும் ஆவார். இது மிட்டல்களையும் அம்பானிகளையும் ஒருவரையொருவர் தொடர்புபடுத்துகிறது.

மேதாக்கள்: முகேஷ் மற்றும் நீதாவின் மகன் ஆகாஷ் அம்பானி, ரோஸி புளூ இந்தியாவின் நிர்வாக இயக்குனரான இந்திய தொழிலதிபர் ரசல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தாவை மணந்தார். ரசல் மேத்தா குடும்பம் வைர வியாபாரத்தில் கொடிக்கட்டி பறக்கிறது.

மெர்ச்சன்ட்கள்: முகேஷ் மற்றும் நிதாவின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்க உள்ளார். மெர்ச்சன்ட் குடும்பம் ஹெல்த்கேர் வர்த்தகத்தில் சிறந்து விளங்குகிறது.

பிரமால்கள்: 2018 ஆம் ஆண்டில், இஷா அம்பானி ஆனந்த் பிரமாலை மணந்தார், அவரது பெற்றோர், அஜய் மற்றும் ஸ்வாதி பிரமால், பல்வேறு குழுமமான பிரமால் குழுவைச் சேர்ந்தவர்கள்.

கோத்தாரிகள்: முகேஷ் அம்பானியின் சகோதரியான நீனா கோத்தாரி, தொழிலதிபர் பத்ராஷ்யம் கோத்தாரியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அர்ஜுன் மற்றும் நயன்தாரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மாரிவாலாக்கள்: நீனா கோத்தாரியின் மகனும், முகேஷ் அம்பானியின் மருமகனுமான அர்ஜுன் கோத்தாரி, மரிகோ இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர்களான ராஜேந்திரன் மற்றும் அஞ்சலி மரிவாலா ஆகியோரின் மகள் ஆனந்திதா மரிவாலாவை திருமணம் செய்து கொண்டார்.

சல்கோகர்கள்: முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் சகோதரி, தீப்தி சல்கோககர், வி.எம். சல்கோகர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான தத்தராஜ் சல்கோகரை மணந்தார்.

ஷாக்கள்: முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் மற்றும் டினா அம்பானிக்கு ஜெய் அன்மோல், ஜெய் அன்ஷுல் அம்பானி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஜெய் அன்மோல், கிரிஷா ஷாவை மணந்தார்.இப்படித்தான் அவர்கள் ஷாக்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

பாரதியாக்கள்: முகேஷ் அம்பானியின் மருமகளும் நீனா கோத்தாரியின் மகளுமான நயன்தாரா கோத்தாரி, அம்பானிகளையும் பார்தியாக்களையும் இணைக்கும் விதமாக கேகே பிர்லாவின் பேரன் ஷமித் பார்தியாவை மணந்தார்.
Story Written by: I.Jayachandran
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications