செபி அறிவிப்பால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குஷி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றுப் பல கோடி வாடிக்கையாளர்களையும், பல பில்லியன் டாலர் மதிப்பீட்டையும் பெற்றுள்ள இந்த வேளையில், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடத் தயாராகி வருகிறது.

 

இந்நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட தடையாக முக்கியப் பிரச்சனையாக இருக்கும் சுபீரியர் வோட்டிங் ரைட்ஸ் ஷேர் மீதான விதிகளையும், கட்டுப்பாடுகளையும் தளர்த்தப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி முடிவு செய்துள்ளது.

செபி அறிவிப்பால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குஷி..!

ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைவர்களுக்கு உரிய சுபீரியர் வோட்டிங் ரைட்ஸ் ஷேர் கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்படும் இத்திட்டத்தில், ஐபிஓ வெளியிடும் போது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனர் அல்லது தலைவர்கள் தனது கையிருப்பில் இருக்கும் பங்ககுளை குறைக்கும் போது நிறுவனத்தில் அவருக்கான உரிமை குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

இது மட்டும் அல்லாமல் வரி கட்டமைப்புகள் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தவும், அடுத்தடுத்த பணிகளை எளிதாகவும் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.

தற்போது இந்தியாவில் பேடிஎம், சோமேட்டோ, பாலிசிபஜார், நைகா, டெல்ஹிவரி ஆகிய நிறுவனங்கள் இந்த வருடத்திற்கும் ஐபிஓ-வை முழுமையாக முடிக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் தற்போது செபி திட்டமிட்டுள்ள தளர்வுகள் பெரும் உதவியாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big news for IPO targeted startups: Sebi proposed to ease rules on superior voting rights (SR) shares

Big news for IPO targeted startups: Sebi proposed to ease rules on superior voting rights (SR) shares
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X