இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த 5 வருடமாக பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது, அரசியல் தடுமாற்றம், ஆட்சி மாற்றம், மக்கள் வறுமையில் தவிப்பு, படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் காரணத்தால் வெளிநாட்டுக்குச் செல்ல துவங்கியது, அவை அனைத்திற்கும் மத்தியில் நாட்டை நிர்வாகம் செய்ய நிதி பற்றாக்குறையால் தவித்தது பாகிஸ்தான் அரசு கஜானா-வை காலியாக்கியது.
இப்படியிருக்கையில் தான் பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் திவால் ஆகாமல் காப்பாற்ற பல நாடுகளிடம் உதவி கேட்டு வந்த நிலையில் இப்பிரச்சனைக்கு உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பாகிஸ்தான் அரசு, சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவியைக் கேட்டது.

இந்த நிதியுதவியை பெற ஐஎம்எப் அமைப்பு, பாகிஸ்தானுக்கு 15 பக்க கண்டிஷன் போட்டு பல அரசியல் விஷயங்களிலும், மக்கள் நலன் விஷயங்களிலும் கைவைத்தது. இதைக் கட்டாயமாகக் கைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலையில் பாகிஸ்தான் அரசு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஐபிஎம் கடன் கொடுக்க தற்போது பச்சை கொடி காட்டியுள்ளது.
மோசமான நிதி பற்றாக்குறையால் திணறும் பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டாலர் கடன் ஒப்புதல் அளித்துள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் (IMF) அமைப்பு அறிவித்துள்ளதாகவும், கடன் விவகாரத்தில் இரண்டு தரப்புகளும் ஒரு நடுப்புள்ளியை எட்டியதாகவும், இதனால் கடன் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது என்று பாகிஸ்தான் தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது.
ஐபிஎம்- பாகிஸ்தான் மத்தியில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் அதிகமாகக் கடனுக்கான பேச்சுவார்த்தை நடத்து வந்தாலும். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இறுதி ஒப்புதலுக்காகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த 7 பில்லியன் டாலர் கடன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 58,590 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பாகிஸ்தான் அரசுக்கு அடுத்த 37 மாதங்களில் பல்வேறு தவணைகளாகப் பெறும். இந்த நிதியைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் மோசமான நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்த உள்ளது.
அரசு சொத்துக்களையும் விற்பனை செய்தும், அரசு ஊழியர்கள், அமைச்சர்களுக்கான சலுகைகள், சம்பளம் ஆகியவற்றைக் குறைக்கும் அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு இந்த 7 பில்லியன் டாலர் கடன் மிகவும் முக்கியமானது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் ஐபிஎம் கடன் குறித்து, ஜூன் மாதம் முதல் IMF உடன் தனது குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் தெரிவித்தார். IMF தலைவர் கிறிஸ்டலினா ஜியோர்ஜிவா மற்றும் அவரது குழுவினருக்கு 7 பில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்திற்கு நன்றியும் இந்த அறிக்கை வாயிலாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications