ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று வெளியிட்டார். இதில் பலரும் எதிர்பார்த்து போலவே ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது, இது வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கான ஈஎம்ஐ குறைப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்த உதவும்.
RBI ஆளுநர், உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது மத்திய வங்கிகளுக்கு பெரும் சவாலாக உள்ளதாக கூறினார். பல்வேறு நாடுகளில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கிகளுக்கு சிக்கல்களை உருவாக்குகின்றன. இந்தியாவில், இந்த சவால்களை எதிர்கொள்ள RBI தொடர்ந்து தீவிரமாக செயல்படுவதாக ஆளுநர் உறுதியளித்தார்.

ஆர்பிஐ கவர்னர் தொடர்ந்து 3வது முறையாக ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது பலரையும் ஆச்சிரியத்தில் மூழ்கடித்தாலும், மார்ச் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி தான் இன்றைய வட்டி குறைப்புக்கு முக்கியமான காரணமாக உள்ளது. கடந்த 3 கூட்டத்தில் ஆர்பிஐ 1 சதவீதம் அளவிலான ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. இதன் மூலம் கடன் வாங்கியவர்களுக்கு ஈஎம்ஐ குறையும் காரணத்தால் கூடுதல் பணம் கையில் இருக்கும், இதன் மூலம் வர்த்தகம் மேம்படும் என்பது தான் ஆர்பிஐ கணக்கு.
ரெப்போ விகித குறைப்பை தாண்டி, இன்று ரிசர்வ் வங்கி பண இருப்பு விகிதம் அதாவது CRR 100 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து, தற்போதைய 4% இலிருந்து 3% ஆக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இந்த குறைப்பு செப்டம்பர் 2025 முதல் நான்கு கட்டங்களாக அமல்படுத்தப்படும் என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு, வங்கிகளுக்கு கூடுதல் பணப்புழக்கத்தை வழங்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
CRR குறைப்பு மூலம் வங்கிகளுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணப்புழக்கம் கிடைக்கும். இது நீண்டகால பணப்புழக்கத்தை உறுதிப்படுத்துவதோடு, வங்கிகளுக்கு கூடுதல் நிதி ஆதாரத்தை வழங்கும். இதனால், வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்க முடியும், இது தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025-26 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது GDP வளர்ச்சியை 6.5% ஆக மதிப்பிட்டுள்ளது, இது முந்தைய கணிப்புடன் மாற்றமின்றி உள்ளது. காலாண்டு வாரியாகப் பார்க்கும்போது, முதல் காலாண்டில் 6.5%, இரண்டாம் காலாண்டில் 6.7%, மூன்றாம் காலாண்டில் 6.6%, மற்றும் நான்காம் காலாண்டில் 6.3% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையான கணிப்பு, இந்திய பொருளாதாரத்தின் உறுதியான வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது, இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்.
மேலும் இன்று ஆர்பிஐ வெளியிட்டுள்ள சில்லறை விலை பணவீக்கம் 2025-26 நிதியாண்டிற்கு 3.7% ஆக கணித்துள்ளது, இது முந்தைய கணிப்பான 4% இலிருந்து குறைவாகும். இது நாட்டில் விலைவாசியை குறைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. காலாண்டு வாரியாக பார்க்கும் போது, முதல் காலாண்டில் 2.9% (இது முந்தைய கணிப்பில் 3.6%), இரண்டாம் காலாண்டில் 3.4% (இது முந்தைய கணிப்பில்3.9%), மூன்றாம் காலாண்டில் 3.9% (இது முந்தைய கணிப்பில் 3.8%), மற்றும் நான்காம் காலாண்டில் 4.4% (இது முந்தைய கணிப்புக்கு மாற்றமின்றி) என பணவீக்கம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications