இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது நிர்வாகத்தில் மிக முக்கியமான மாற்றத்தைச் செய்ய முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை எப்படி அலுவலகத்திற்கு அழைப்பது என்பதைத் திட்டமிட்டு வரும் நிலையில், ஊழியர்களும் இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக மாற்றம் குறித்த மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேஷ் கோபிநாதன்
ராஜேஷ் கோபிநாதன் தலைமையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் 50 பில்லியன் டாலர் வருவாய் அடைய வேண்டும் என்று புதிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டாடா குழுமத்தில் அதிக லாபம் அளிக்கும் நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் விளங்கும் நிலையில் இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களைத் தாண்டி அக்சென்சர் நிறுவனத்திற்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
50 பில்லியன் டாலர்
இதற்காகவே தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் புதிய நிர்வாக மாற்றத்தை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 50 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை அடைய வேண்டும் என்பதற்காக மொத்த வர்த்தகத்தை 4 பிரிவுகளைப் பிரித்துள்ளது.
4 பிரிவுகள்
அதாவது டிசிஎஸ் நிறுவனத்தின் கீழ் இருக்கும் மொத்த வர்த்தகத்தையும் acquisition, relationship incubation, enterprise growth மற்றும் business transformation ஆகப் பிரித்துள்ளது. இது வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் geography, vertical, services முறை முழுமையாக நீக்கப்பட உள்ளது.
டிஜிட்டல் சேவை
இப்புதிய மாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்களைச் சிறப்பான முறையில் கவனிப்பது மட்டும் அல்லாமல் அவர்களது டிஜிட்டல் சேவை தேவைகளைப் பூர்த்திச் செய்து வேகமாக டெலிவரி செய்ய முடியும் என டிசிஎஸ் நம்புகிறது.
புதிய தலைவர்கள் புதிய தலைவர்கள்
இந்நிலையில் தற்போது , relationship incubation பிரிவை தற்போது உற்பத்தி மற்றும் யுட்டிலிட்டி பிரிவின் தலைவராக இருக்கும் சுஷில் வாசுதேவன் தலைமையேற்க உள்ளார், enterprise growth பிரிவை பிஸ்னஸ் மற்றும் டெக்னாலஜி பிரிவின் தலைவரான கிருஷ்ணன் ராமானுஜம் தலைமையேற்க உள்ளார், நீண்ட கால மற்றும் பெரிய வாடிக்கையாளர்களுக்காக business transformation பிரிவை தேபாஷிஸ் கோஷ், புதிய பிஸ்னஸ் மாடல் பிரிவை கமல் பதாதா தலைமையேற்க உள்ளார்.
ராஜேஷ் நேரடி கட்டுப்பாடு
இந்த 4 பிரிவின் தலைவர்களும் நேரடியாக டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் கீழ் பணியாற்றுவார்கள். ராஜேஷ் கோபிநாத் தலைமையில் 18.5 பில்லியன் டாலர் டிசிஎஸ் வருமானத்தை 25 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளார். தற்போது 50 பில்லியன் டாலர் வருமானத்தை எட்டும் இலக்கை அடைந்துள்ளார்.
ஐடி ஊழியர்கள்
இப்புதிய மாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் சேவை, தேவைகள் அதிகரிக்கும் காரணத்தால் ஊழியர்களின் பணி சுமை கணிசமாக அதிகரிக்கலாம். இதேவேளையில் ஒவ்வொரு ப்ராஜெக்ட்களையும் வேகமாக முடிக்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications