எலக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ஜாக்பாட்.. நித்தி அயோக் & உலக வங்கியின் புதிய திட்டம்..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சந்தை வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கும் வேளையிலும் கார்களின் விற்பனை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மாற்ற வேண்டும் என்பதற்காகப் புதிதாக ஒரு திட்டத்தை உருவாக்கி அதை மத்திய அரசின் திங்க் டேக் அமைப்பான நித்தி அயோக் மற்றும் உலக வங்கி இணைந்து அளிக்க முடிவு செய்துள்ளது.

நித்தி அயோக் மற்றும் உலக வங்கி இணைந்து வழங்கும் இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் எல்கட்ரிக் வாகனங்களுக்கு வேகமாகவும், எளிதாகவும் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் மந்தமாக இருக்கும் எலக்ட்ரிக் வாகன விற்பனையைப் பெரிய அளவில் மேம்படுத்தப்படும்.

நித்தி அயோக் மற்றும் உலக வங்கி

நித்தி அயோக் மற்றும் உலக வங்கி

நித்தி அயோக் மற்றும் உலக வங்கி இணைந்து சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான முதல் நஷ்ட ஆபத்துக்களைப் பகிரும் திட்டத்தை (loss risk sharing instrument) உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ப்ரோகிராம் மேனேஜர் ஆக இயங்க உள்ளது.

1.5 பில்லியன் டாலர்

1.5 பில்லியன் டாலர்

இந்தத் திட்டம் மூலம் சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை எலக்ட்ரிக் வாகன விற்பனைக்கு நிதியுதவி அளிக்க முடியும். இதனால் இத்துறை வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் உற்பத்தியும் அதிகரிக்கும்.

நஷ்டம்

நஷ்டம்

இந்த நஷ்ட ஆபத்துக்களைப் பகிரும் திட்டத்தைப் பயன்படுத்தி வங்கிகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கடனை அதிகளவில் அளிக்க முடியும், ஒருவேளை இந்தக் கடனில் பாதிப்பு ஏற்பட்டால் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் டாலர் மூலம் ஈடு செய்துகொள்ள முடியும்.

கடன் வட்டி விகிதம்

கடன் வட்டி விகிதம்

இந்தக் கட்டமைப்பு மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கடனை வங்கிகள் அதிகளவில் அளிப்பது மட்டும் அல்லாமல், அதன் விற்பனை, உற்பத்தி ஆகியவை அதிகரிக்கும். அனைத்திற்கும் மேலாக இத்திட்டம் மூலம் எலக்ட்ரிக் கார்களுக்கான கடன் வட்டி விகிதம் (cost of financing) 10 முதல் 12 சதவீதம் வரையில் குறைக்க முடியும் என நித்தி அயோக் அமைப்பின் சிஇஓ அமிதாப் காந் தெரிவித்துள்ளார்.

பெரும் மாற்றம்

பெரும் மாற்றம்

தற்போது எலக்ட்ரிக் இரு சக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கான வட்டி விகிதம் 20 முதல் 25 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்த நிதி திட்டம் மூலம் இந்த வட்டி விகிதம் 10 - 12 சதவீதமாகக் குறையும் என நம்பப்படுகிறது. இந்த மாற்றம் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+