வெள்ளிக்கிழமை RBI வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy படி, புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மிகப்பெரிய திட்டமிடல் உடன் பிரதமர் மோடி அறிவித்த நிலையில், நாட்டின் பணபுழக்கத்தை உறுதி செய்ய கொண்டுவரப்பட்டது தான் 2000 ரூபாய் நோட்டு. இப்படிப்பட்ட 2000 ரூபாய் நோட்டை பொசுக்குன்னு புழக்கத்தில் இருந்து, அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 6 வருடத்தில் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவது ஏன்..?

ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy படி, புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. Clean Note Policy என்றால் என்ன..?
இந்திய ரிசர்வ் வங்கி மக்களுக்கு குவாலிட்டியான ரூபாய் நோட்டுகளை பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு கொள்கை தான் Clean Note Policy, ஆனால் இதை கருப்பு பணத்தை ஒழிக்கவும், அதை மக்களின் பயன்பாட்டில் இருந்தும் குறைக்கவும் கொண்டுவரப்பட்டது தான் இந்த கொள்கை என கூறப்படுகிறது.
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டு அதிகமான காரணத்தால் தான் Clean Note Policy அடிப்படையில் 2000 ரூபாய் திருப்ப பெறப்பட்டு உள்ளதாக பிஸ்னஸ்டுடே ஆர்பிஐ அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யும் போது சிப் வைக்கப்பட்டு உள்ளது முதல் உலகின் நவீன பாதுகாப்பு அம்சங்கள் உடன் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் தற்போது Clean Note Policy கீழ் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
2000 ரூபாய் நோட்டை போல தான் 500 ரூபாய் நோட்டும் தயாரிக்கப்பட்டு உள்ளது, பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து பொருளாதாரத்தில் தேவையா நாணயத் புழக்கத்தை உருவாக்க RBI சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் நவம்பர் 2016 இல் 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது, மற்றும் சந்தையில் போதுமான பிற மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளது. அதனால், 2018-19ல் ₹2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications