மத்திய அரசில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தியை மத்திய அரசு வழங்க இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள் பலரும் சம்பள கமிஷன் தாமதமாகிவிட்டது என்ற கவலையில் இருக்கின்றனர். ஆனால் சம்பள கமிஷன் தாமதமானாலும் உங்களுக்கான சம்பள உயர்வு அடுத்த மாதத்திலிருந்து கிடைக்கப் போகிறது. மத்திய அரசு கூடிய விரைவில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அடிப்படையில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது. ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் , விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்கப்படுகிறது. அதாவது அடிப்படை சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அகவிலைப்படியாக வழங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
ஜனவரி மற்றும் ஜூலை என ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்வு கிடைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதத்திற்கான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் வெளியாகும். அந்த வகையில் இந்த ஜனவரியில் கிடைக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை கூடிய விரைவில் மத்திய அரசு வெளியிட தயாராகி வருகிறது. இந்த முறை எத்தனை சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிலவுகிறது.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அனைவருமே அடிப்படை சம்பளத்தில் 58 சதவீத தொகை அகவிலைபடியாக பெறுகிறார்கள். கடந்த அக்டோபர் மாதத்தில் அரசு மூன்று சதவீதம் என அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது. கூடிய விரைவில் புதிய அகவிலைப்படி உயர்வு வர உள்ளது. இந்த முறை இரண்டு சதவீதத்திலிருந்து அகவிலைப்படி உயர்வு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி இருந்தால் மொத்தமாக கிடைக்கக்கூடிய அகவிலை படியின் அளவு 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக இருக்கும் அல்லது அதற்கு மேலும் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. 7ஆவது சம்பள கமிஷன் அடிப்பையில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய். லெவல் 1 நிலை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் இது. இந்த தொகையில் 60% அகவிலைப்படி என்றால் 10,800 ரூபாய் கிடைக்கும். அதாவது 18,000 அடிப்படை சம்பளம், அகவிலைப்படி ஒரு 10,800 ரூபாய், இது தவிர வீட்டு வாடகை , டிராவல் அலொவென்ஸ் ஆகியவையும் கிடைக்கும்.
எனவே அரசு ஊழியர்களுக்கான குறைந்த பட்ச அகவிலைப்படியே 10,800 ரூபாய் என உயர்கிறது. அது மட்டும் இல்லாமல் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களுக்கான அறியர் தொகையும் சேர்த்து வழங்கப்படும். மார்ச் 4இல் ஹோலி பண்டிகை வருவதால் அதற்கு முன்னதாகவே அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications