ஐடி ஊழியர்களுக்கு யோகம்... அமெரிக்காவில் நாடு வாரியான கிரீன் கார்டு கட்டுப்பாடு நீக்கம்..!

அமெரிக்காவில் கீர்ன் கார்டு வழங்குவதில் நாடு வாரியான கட்டுப்பாடுகள் உள்ளது, இந்தக் கட்டுப்பாடு தற்போது முழுமையாக நீக்கப்பட்டு அமலாக்கம் செய்யத் தயாராக உள்ளது. இது அமலாக்கம் செய்யப்படும் நிலையில் இந்திய ஐடி ஊழியர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக இருக்கும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கிரீன் கார்டு வழங்குவதில் இருக்கும் நாடு வாரியான கட்டுப்பாடுகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் அதிபரின் இறுதி கையெழுத்திற்காக இந்த மசோதா காத்துக்கொண்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் செங்குத்து காடு கட்டிடத்தை பாருங்கள்

1,40,000 கிரீன் கார்டு

1,40,000 கிரீன் கார்டு

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,40,000 பேருக்கு அமெரிக்காவின் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு கொடுக்கப்படுகிறது. இந்தக் கீர்ன் கார்டு வழங்குவதற்கு ஒவ்வொரு நாடுகளுக்கும் அதிகப்படியாக 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டு கொடுக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு உள்ளது.

இந்தக் கட்டுப்பாடு தான் தற்போது நீக்கப்பட உள்ளது.

8 லட்சம் இந்தியர்கள்

8 லட்சம் இந்தியர்கள்

ஏப்ரல் 2020 கணக்கின் படி சுமார் 8 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பத்திது காத்துக்கொண்டு இருக்கின்றனர் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றம் சேவை அமைப்பின் தரவுகள் கூறுகிறது.

இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் மசோதா கையெழுத்தாகும் பட்சத்தில் அதிகளவிலான இந்தியர்கள் கிரீன் கார்டு பெற முடியும்.

 

சிக்கல்

சிக்கல்

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அடைந்தாலும், தற்போது புதிதாகக் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மறுபரீசிலனை செய்து அதிபரின் கையெழுத்திட வேண்டும். ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது, இந்த மசோதாவில் சீன ராணுவத்துடன் தொடர்புடைய சீன மக்களுக்கு இது பொருந்தாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும் பிரச்சனை வர வாய்ப்புள்ளதாக சட்ட ஆலோசகரான நந்தின் நாயர் தெரிவித்துள்ளார்.

ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா

இந்த 7 சதவீத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 10 வருடமும் முழுமையாக முடிந்த நிலையில் முதல் 9 வருடத்தில் 70 சதவீத கிரீன் கார்டுகள் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்குச் சென்றுள்ளது. 10வது வருடத்தில் இது 50 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+