ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் தென்கொரியாவின் போஸ்கோ குழுமம் இணைந்து இந்தியாவில் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட ஒருங்கிணைந்த ஸ்டீல் தொழிற்சாலை அமைக்க இன்று (அக்டோபர் 29 தேதி) ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் இந்தியாவில் ஸ்டீல், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இணைந்து செயல்பட ஒரு கட்டமைப்பை நிறுவ உள்ளது.

இந்த இரண்டு குழுமங்களும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகிறது.
ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் போஸ்கோ குழுமத்தின் இணைப்பு இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தித் திறனை அதிகரித்து, இரு நாடுகளிலும் sustainability முயற்சிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் மும்பையில் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைமையகத்தில், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் போஸ்கோ தலைவர் சாங் இன்-ஹ்வா மற்றும் இரு வர்த்தக குழுமத்தின் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த கூட்டணி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அதிநவீன ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டீல் உற்பத்தி ஆலை மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான எகோசிஸ்டம் அமைக்கப்பட உள்ளது. போஸ்கோ நிறுவனம் இந்த மாபெரும் முதலீட்டு திட்டத்திற்காக இதற்கு முன்பு அதானி உடன் கூட்டணி சேர முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீல் துறையில் ஏற்கனவே அசத்தி வரும் JSW குழுமத்திற்கு போஸ்கோ உடனான கூட்டணி அதிநவீன தொழில்நுட்பம், புதிய சப்ளை செயின் ஆகியவை கிடைக்கும். மேலும் போஸ்கோ இந்தியாவில் 2012 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.
இந்தியாவில் சென்னை, டெல்லி, புனே, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் ஸ்டீல் ஆலையை வைத்துள்ளது. போஸ்கோ ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான ஸ்டீல் உலோகம் சார்ந்த சேவைகளையும், சப்ளைகளையும் செய்து வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் JSW Steel நிறுவனப் பங்குகள் 0.71 சதவீதம் சரிந்து 960.60 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications