செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தற்போது பணியில் இருக்கும் பெரும்பாலான ஊழியர்கள் தங்களுடைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் நிலவி வரும் வேளையில், இந்தியா அலுவலக ரியல் எஸ்டேட் துறை மாறுபட்ட கணிப்பை முன் வைக்கிறது.
பொதுவாக அதிகளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் அலுவலக இடங்களுக்கான தேவை குறையும், இதனால் அலுவலக இடம் காலியாகும். இதை கொரோனா காலத்தில் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கப்பட்ட போது அலுவலக இடங்கள் காலி செய்யப்பட்டத்தைப் பார்த்தோம்.

ஆனால் ஏஐ வந்த பின்பும், பணிநீக்கம் அதிகரிக்கப்பட்ட பின்பும் இந்தியாவில் அலுவலகம் பயன்படுத்தப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை அடுத்த 4 வருடத்தில் 3.8 கோடியில் இருந்து 4.8 கோடியாக அதிகரிக்கும் என Cushman & Wakefield நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் அலுவலகம் அடிப்படையிலான வர்த்தகம் மற்றும் சேவை ஒருபக்கம் அதிகரித்து வரும் வேளையில், மறுப்பக்கம் ஜிசிசி நிறுவனங்களின் வருகை வேகமாக அதிகரித்து வருகிறது இதனால் இந்தியாவில் அலுவலகங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை, மேலும் ஏஐ அடிப்படையிலான பல்வேறு பணிகள் ஆட்டோமேட் செய்யப்படும் வேளையிலும் உயர் தரச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் காரணத்தால் அலுவலக இடத்திற்கான தேவை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என Cushman & Wakefield அறிக்கை கூறுகிறது.
மேலும் இந்தியாவில் அலுவலக ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு முக்கிய தூணாக இருக்கப்போவது ஜிசிசி நிறுவனங்கள் தான், அடுத்தாக தற்போது இந்தியாவில் R&D, ப்ராடெக்ட் இன்ஜினியரிங், அனலிட்டிக்ஸ் ஆகியவை தற்போது வேகமாக வளர்ச்சி அடையும் பிரிவாக இருக்கும் வேளையில் பெரு நகரங்களில் அலுவலக இடங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடி, டெக் சேவைகள், டிஜிட்டல் சேவைகள் தற்போது அதிகமாக 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களை டார்கெட் செய்யும் காரணத்தால் சிறு நகரங்களிலும் அலுவலக ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடையும் பிரிவாக உள்ளது.
பொதுவாக ஒரு நகரின் வளர்ச்சியில் அலுவலக ரியல் எஸ்டேட் மற்றும் இண்டஸ்ட்ரியல் ரியல் எஸ்டேட் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இவ்விரண்டும் உயர்ந்தால் ரெசிடென்ஷியல் ரியல் எஸ்டேட், கமர்சியல் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ச்சி அடையும்.


Click it and Unblock the Notifications