கொரோனா காரணமாக கடந்த ஆண்டில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வந்தன. இந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கமானது குறையத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது அலுவகத்துக்கு வரும் படி கூறி வருகின்றன.
எனினும் தற்போது உருமாறிய டெல்டா கொரொனாவின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக் கொண்டு வர வேண்டும் என கூறி வருகின்றன.
உலகின் முன்னணி நிறுவனங்களான ஆல்பாபெட் இன்க், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக் கொண்டு அலுவலகத்திற்கு வர கூறியுள்ளன. குறிப்பாக கூகுள் நிறுவனம் தனது மற்ற பிராந்திய அலுவலகங்களுக்கும் தடுப்பூசி திட்டத்தினை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
டெல்டா பரவல்
இதே ட்விட்டர் நிறுவனம் 15 தினங்களுக்கு முன்னர் தான், 16 மாதங்களுக்கு பிறகு, 50% பணியாளர்களுடன் சான் பிரான்சிஸ்கோ மற்றும் நியூயார்க்கில் உள்ள அலுவலகத்தினை தொடங்கியது. ஆனால் தற்போது அமெரிக்காவில் டெல்டா வகையான கொரோனா பரவல் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் மூடியுள்ளது.
சுகாதார துறை கருத்து
உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கமானது வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்படும் வரையில், பேஸ் மாஸ்குகளை அணிய வேண்டும் என அந்த நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
லிஃப்ட் இன்க் நிறுவனம் அறிவிப்பு
ஏற்கனவே அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களுக்கு தடுப்பூசியினை கட்டாயமாக்கியிருந்த லிஃப்ட் இன்க் நிறுவனம், செப்டம்பர் மாதம் திறப்பதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் வரையில் மீண்டும் தள்ளி வைத்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வரவிருக்கும் மாதங்களில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக லிஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லோகன் கிரீன் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் இன்க் - மாஸ்க் கட்டாயம்
இதே நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவித்துள்ளது. இதே போல ஆப்பிள் இன்க் நிறுவனமும், அதன் சில்லறை வர்த்தக கடைகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும், தடுப்பூசியே போட்டிருந்தாலும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூகுள் WFH
இதே மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் உபெர் நிறுவனங்கள் ஊழியர்கள், விரைவில் அலுவலகங்களுக்கு திரும்பலாம் என்றும் கூறியுள்ளன. கூகுள் நிறுவனம் டெல்டா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை டெக் நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications