வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டிற்குப் பணம் அனுப்பும் அனைவருக்கும் UAE எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் குறித்துத் தெரியாமல் இருந்திருக்காது. UAE எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் மற்றும் தடையின் காரணமாக இந்நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் UAE எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான BR.ஷெட்டி மீது பார்க்லேஸ் 2020ல் தொடுத்த வழக்கிற்குத் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.
பாவகுத்து ரகுராம் ஷெட்டி
UAE எக்ஸ்சேஞ்ச் மற்றும் NMC ஹெல்த் ஆகிய நிறுவனங்களின் தலைவரும் உரிமையாளரும் இந்தியருமான பாவகுத்து ரகுராம் ஷெட்டி வாங்கிய 100 மில்லியன் டாலர் கடனை மறைத்த காரணமாக இந்நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாமல் UAE நாட்டின் மத்திய வங்கி கண்காணிப்பில் வைத்துள்ளது.
பார்க்லேஸ் நிறுவனம்
இதேவேளையில் 2020ல் பார்க்லேஸ் நிறுவனம் பாவகுத்து ரகுராம் ஷெட்டி-யின் UAE எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் துபாய் நீதிபதி குறித்த பணத்தைச் செலுத்துமாறு உத்தரவிட்ட நிலையில், இப்பணத்தை விரைவாகப் பெற வேண்டும் என்பதற்காகப் பார்க்லேஸ் நிறுவனம் லண்டன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது.
லண்டன் நீதிமன்றம்
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் லண்டன் நீதிமன்றம் பாவகுத்து ரகுராம் ஷெட்டி தான் நிதி உதவி இல்லாமல் முடங்கியுள்ளதாக அறிவித்து கொடுத்துள்ள மனுவை நிராகரித்துப் பார்க்லேஸ் நிறுவனத்திற்கு 131 மில்லியன் டாலர் தொகையைக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
முடக்கம்
பிஆர்.ஷெட்டி-யின் நிறுவனங்கள் அடுத்தடுத்து நிதி சிக்கல்கள், மோசடிகள், நிர்வாக முறைகேடுகளைச் செய்து மாட்டிய நிலையில், பிஆர்.ஷெட்டி மற்றும் அவருடை வங்கி கணக்குகள், சொத்துக்கள் ஐக்கிய அரபு நாடுகளில் மட்டும் அல்லாமல் இந்தியா, என உலகில் அனைத்து நாடுகளிலும் முடக்கப்பட்டு உள்ளது.
நிதியுதவியும், நிதி ஆதாரங்கள்
இதனால் பிஆர்.ஷெட்டி நிதியுதவியும், நிதி ஆதாரங்கள் இல்லாமலும் இருக்கிறார், இதைத் தான் லண்டன் நீதிமன்றத்திலும் தெரிவித்தார், ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. வெளிநாட்டில் இருக்கும் இந்திய தொழிலதிபர்களில் மிகவும் முக்கியமானவராகத் திகழ்ந்த பிஆர்.ஷெட்டி தற்போது வீழ்ந்துள்ளார்.
Ernst & Young மீது வழக்கு
இதேபோல் பிஆர்.ஷெட்டியின் NMC ஹெல்த் நிறுவனத்தின் கணக்குகளைத் தவறாகத் தணிக்கை செய்த Ernst & Young நிறுவனத்தின் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கில் வெற்றிப்பெற்றால் சுமார் 7 பில்லியன் டாலர் அளவிலான தொகை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications