அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சமீபத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவனங்களை எச்சரித்தார். பொருளாதார மந்த நிலை வரலாம் என்பதால், மக்கள் பெரியளவிலான பொருட்கள் வாங்குவதை தள்ளி வைக்கலாம் என கூறியிருந்தார்.
இது குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் சமீபத்தில் ஜெப் பெசோஸ் கூறியிருந்தார்.
இந்த பேட்டியில் அமெரிக்க மக்கள் புதிய கார்கள் மற்றும் டிவிகளை வாங்க வேண்டாம் என்றும் கூறினார். ஏனெனில் அமெரிக்கா மந்த நிலையை நோக்கி காத்துக் கொண்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என எச்சரித்துள்ளார்.
கடன் அதிகம்
அமெரிக்கர்களின் வீட்டுக்கடன் 16.5 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. அமெரிக்கர்கள் கடனை நம்பியிருக்கிறார்கள். ஆக மக்களுக்கு எனது அறிவுரை.மேசையில் இருந்து சில அபாயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏதேனும் வாங்க போகின்றீர்கள் என்றால் அதனை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். அந்த பணத்தை சேமித்து வைத்திருங்கள். என்ன நடக்கிறது என்பதை பாருங்கள் என பெசோஸ் கூறியிருந்தார்.
கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள்
நீங்கள் ஒரு பெரிய அளவிலான டிவியினை வாங்க நினைக்கும் தனி நபர் எனில், கொஞ்சம் உங்கள் பணத்தை வைத்திருங்கள். நிலைமையை கொஞ்சம் கண்கானியுங்கள்.
இது மட்டும் அல்ல, புதிய வாகனங்கள் அல்லது பிரிட்ஜ் எதுவாக இருந்தாலும் சரி, கொஞ்சம் பொறுங்கள். தற்போது பொருளாதாரம் சரியில்லை. அனைத்தும் மெதுவாக உள்ளன. பல துறைகளிலும் பணி நீக்கங்கள் உள்ளன. அதனை பார்த்துக் கொண்டுள்ளீர்கள்.
சிறு வியாரிகளுக்கு அட்வைஸ்
அமேசானின் முன்னாள் தலைமை அதிகாரி சிறு வணிக உரிமையாளார்கள் தங்கள் கையில், பண இருப்பினை அதிகரிக்க புதிய உபகரணங்கள் வாங்கி போடுவதை கொஞ்ச காலத்திற்கு தள்ளிபோடுங்கள் என அறிவுரை கூறினார். உங்களால் முடிந்தவரை இருப்பை அதிகரியுங்கள். வரவிருக்கும் மோசமான காலத்தினை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என தெரிவித்துள்ளார்.
நன்கொடை
இந்த பேட்டியின்போது பில்லியனர் ஜெப் பெசோஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியினை நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தார். பெசோஸின் சொத்து மதிப்பு ப்ளும் பெர்க் அறிக்கையின் படி, 123.9 பில்லியன் டாலராகும்.
பணி நீக்கம் தொடரும்
அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஆண்டி ஜெஸ்ஸி அமேசானில் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பணி நீக்கம் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளார். இது 2023ம் ஆண்டில் வணிக சூழலுக்கு ஏற்ப இந்த பணி நீக்க நடவடிக்கையானது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பணி நீக்கமானது வருடாந்திர செயல்பாட்டின் ஒரு நடவடிக்கை தான் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளுக்கும் பொருந்தும்
அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகின் பல முன்னணி பொருளாதார நாடுகளும் மந்த நிலையை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையால் சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பணவீக்க விகிதமானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் பல நாடுகளின் பொருளாதாரமும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. ஆக ஜெப் பெசோஸ்-ன் இந்த அறிவிப்பானது பெரும்பாலான நாட்டினருக்கும் பொருந்தும் எனலாம். என்ன பிரண்ட்ஸ் நீங்களும் கொஞ்சம் ரெடியா இருங்க.. சேமிக்க ஆரம்பியுங்க
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications