ஆசியாவின் டாப் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் விரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இடையே திருமணம் இன்று நடைபெறுகிறது.
மும்பையின் பாந்த்ரா- குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமண விழா நடைபெறுகிறது.
இதற்காக உலகம் முழுவதும் இருந்து ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் வந்தபடி உள்ளனர்.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் சற்றுமுன் மும்பையின் கலினா விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து அவர் காரில் திருமண மண்டபத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கரும் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுடன் மகள் சாராவும் வந்திருந்தார். சாரா அணிந்திருந்த ஆடை பார்ப்பவர்களை கவர்ந்தது.
இங்கிலாந்து பிரபல கிரிக்கெட் கால்பந்து வீரர் டேவிட் பெக்ஹாம் இந்த திருமணத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்பானி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக பெக்ஹாம் இருந்து வருகிறார்.
மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் நர லோகேஷ், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், குடியரசு முன்னாள் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
பிரபல மாடல்களான கர்தாஷியன் சகோதரிகளான் கிம் மற்றும் கோல் ஆகியோரும் திருமணத்துக்காக வந்துள்ளனர். போட்காஸ்டர் ஜெய் ஷெட்டி, மல்யுத்த வீரர் மற்றும் நடிகர் ஜான் சீனா, பாடகர் லூயிஸ் ரோட்ரிக்ஸ், ரெமா ஆகியோரும் வரவிருக்கின்றனர்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி முன்னாள் பிரதமர் மேட்டியோ ரென்ஸி, கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஸ்வீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் ஆகியோரும் வரவிருக்கின்றனர்.
இவர்கள் தவிர தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசன், உலக வர்த்தக அமைப்பு தலைவர் நோஸி ஓகோன்ஜோ, ஃபீஃபா தலைவர் ஜியானி இன்பேன்டினோ ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹெச்எஸ்பிசி தலைவர் மார்க் டக்கர், ஆரம்கோ சிஇஓ அமீன் நாசர், மோ்கன் ஸ்டான்லி எம்டி மைக்கேல் கிரைம்ஸ், அடோபி சிஇஓ சாந்தனு நாராயண், முபாடலா எம்டி கால்டூன் அல் முபாரக், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ, லாக்ஹீட் மார்ட்டின் சிஇஓ ஜேம்ஸ் டாய்ஸ்லெட், பிபி சிஇஓ முர்ரே அக்கின்கிளாஸ், டேமாசெக் சிஇஓ தில்ஹான் பிள்ளை, எரிக்சன் சிஇஓ போர்ஜே ஏக்ஹோம் ஆகியோரும் திருமணத்துக்கு வந்துள்ளனர்.
திருமணத்துக்கு மறுநாளான நாளைக்கு சுப ஆசிர்வாத நிகழ்ச்சியும் 14 ஆம் தேதியன்று திருமண வரவேற்பும் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications