Make in India திட்டத்திற்கு வெற்றி.. இந்தியாவில் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்யும் சீனா!

இந்தியா இப்போது ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்வதில், இந்தியா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன்கள் உட்பட, இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியில் சீனா இன்னும் முன்னணி வகிக்கும் நிலையில், இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், சில முக்கியமான மற்றும் பிரபலமாக பிராண்டுகளும் அடங்கும்.

சீனாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், சில வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து தங்கள் ஸ்மார்ட் போன்களை ஏற்றுமதி செய்கின்றன. இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்து மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளன. இந்த மாற்றம், இந்தியாவின் ஊக்கம் மற்றும் உள்நாட்டு உற்பத்தித் திறனின் வளர்ச்சி காரணமாகவே சாத்தியமாகியுள்ளது.

Make in India திட்டத்திற்கு வெற்றி.. இந்தியாவில் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்யும் சீனா!

இதுவரை இந்தியாவில் உள் சந்தை விற்பனைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்த சீன பிராண்டுகள், இப்போது ஏற்றுமதி மயமாக மாறிவருகின்றன. இந்த மாற்றத்திற்கான பின்னணியில், 2020இல் இந்தியா - சீனா இடையேயான எல்லை சிக்கல்களுக்கு பின்னர், சீன நிறுவனங்களுக்கான அரசு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது, அதே நேரத்தில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் ஊக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Oppo Mobiles India, FY24இல் தனது முதல் வெளிநாட்டு வருமானமாக ரூ.272 கோடி ஈட்டியுள்ளது. Realme Mobile Telecommunications நிறுவனம் ரூ.114 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதன் மூலம், சீன பிராண்டுகள் தற்போது 'மேக் இன் இந்தியா'-வை உண்மையிலேயே தங்கள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் சர்வதேச விநியோக வலையமைப்புகளின் ஒரு பகுதியாக ஏற்கத் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் இயங்கும் முக்கியமான சீன எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகள், தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என மாற்றமடையத் தொடங்கியுள்ளது. இது 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஒரு முக்கிய சீன தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பிராண்டான ஹைசென்ஸ் குழுமம் (Hisense), மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஹைசென்ஸ் குழுமத்தின் கூட்டாளியான எபேக் டியூரபிளின் நிர்வாக இயக்குநரான அஜய் சிங்கானியா கூறுகையில், "இம்மாத தொடக்கத்தில் ஸ்ரீ சிட்டியில் ஹைசென்ஸிற்காக ரூ.100 கோடி செலவில் தொழிற்சாலையை நிறுவுவது குறித்து ஆய்வாளர்களிடம் தெரிவித்தார். இதில் ஏற்றுமதி செயல்பாடுகளும் அடங்கும். அதேபோல், லெனோவா குழுமம் (Lenovo) இந்தியாவில் இருந்து சர்வர்கள் மற்றும் மடிக்கணினிகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் ஏற்றுமதி தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அதன் உற்பத்தி திறனை 50% அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.

Oppo, Vivo, Realme, OnePlus மற்றும் Xiaomi உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், FY24 இல் Xiaomi, Midea மற்றும் OnePlus ஆகியவற்றிற்கான RoC தாக்கல்கள் ஏற்றுமதியில் இருந்து எந்த அந்நியச் செலாவணி வருவாயையும் குறிக்கவில்லை. இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள், நிர்வாக இயக்குநர்கள் அல்லது தலைமை நிர்வாகிகள் பதவிகளுக்கு இன்னும் இந்தியர்களை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்கள், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி திறன் சர்வதேச வியாபாரத்திற்கு மாறும் முக்கிய நிலையை அடைந்துள்ளதை காட்டுகிறது. 'Made in India' எனும் பதக்கத்துடன் சீன பிராண்டுகள் உலக சந்தையில் புது முகமாக மாறுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+