இந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. அனைத்து மொழிகளிலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது இது பிக் பாஸ் சீசன் என்று கூறலாம். தமிழ், கனடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. கனடாவை பொருத்தவரை 12 வது சீசன் கடந்த மாதம் 28ஆம் தேதி தான் தொடங்கியது. நடிகர் கிச்சா சுதீப் தான் இதன் தொகுப்பாளராக இருக்கிறார். வழக்கம் போல பல்வேறு ஆரவாரங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் பிக் பாஸ் கனடா சீசன் 12 நடைபெற்று வந்தது.

கனடா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு ஐசரி கணேஷுக்கு சொந்தமான வேல்ஸ் குழுமத்துக்கு உட்பட்ட ஜாலிவுட் ஸ்டுடியோஸ் என்ற ஸ்டுடியோவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஸ்டுடியோவில் பல்வேறு சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக கூறி கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அந்த ஸ்டுடியோவை மூட உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஜாலிவுட் ஸ்டுடியோவில் நேரடியாக சென்று ஆய்வு நடத்திய போது கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யவில்லை என்பன உள்ளிட்ட விதிமீறல்கள் நடந்திருப்பதாக கண்டுபிடித்து இருக்கின்றனர்.
Bigg Boss Kannada team is approaching the Karnataka High Court, questioning the DC’s order that halted the show. Legal consultations already underway…!!! #BiggBossKannada12 #BiggBossKannadaSeason12 pic.twitter.com/eQ6hHEZStl
— Madhuri Adnal (@madhuriadnal) October 7, 2025
இதனை அடுத்து உடனடியாக இந்த ஸ்டுடியோவை மூட உத்தரவு பிறப்பித்தனர் . அக்டோபர் ஆறாம் தேதி இந்த உத்தரவு வெளியானது இதனை அடுத்து ஸ்டுடியோவுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் திகைத்து நின்றது. தற்போதைக்கு இந்த ஸ்டுடியோவில் தங்கி இருந்த 17 போட்டியாளர்களும் இங்கே நிகழ்ச்சி தொடர்பாக வேலை செய்து வந்த 700 ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர் .

போட்டியாளர்கள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இவை அனைத்தும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன . மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. தற்போதைக்கு போட்டியாளர்களும் இந்த தயாரிப்பு குழுவை சேர்ந்த ஊழியர்களும் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஸ்டுடியோ மூடப்பட்டிருப்பதால் பல கோடி ரூபாய் முதலீடு நஷ்டம் அடைந்திருக்கிறது. நிகழ்ச்சி தயாரிக்கும் நிறுவனமும் இதனை ஒளிபரப்பும் தொலைக்காட்சியும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கின்றன. தற்போதைக்கு இந்த நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தயாரிப்பு நிறுவனம் கூடிய விரைவில் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன . தற்போதைக்கு போட்டியாளர்கள் ஈகிள்டன் ரிசார்ட் எனப்படும் புகழ்பெற்ற ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது இந்த ஸ்டுடியோ அமைந்துள்ள பிடாடி தொழில் பூங்கா பகுதியிலேயே தான் அமைந்திருக்கிறது .
தற்போதைக்கு படப்பிடிப்பு நடக்கவில்லை, அடுத்து என்ன செய்வது என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யவில்லை என்பதால் பிக் பாஸ் சீசன் தற்காலிகமாக நிறுத்தப்படுமா அல்லது இந்த சீசனுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதே வேளையில் தயாரிப்பு நிறுவனம் வேறு ஒரு இடத்தில் ஷூட்டிங் நடத்துவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஈகிள்டன் ரிசார்ட் பெங்களூருவின் மிகவும் புகழ்பெற்ற ஒரு ரிசார்ட் ஆகும். ஆடம்பரமான பல்வேறு வசதிகள் நிறைந்த இந்த ரிசார்ட்டில் பல்வேறு அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் நடந்து இருக்கின்றன . 2017 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலின் போது குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இங்கு தான் அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது நாடு முழுவதும் பேசப்படும் ஒரு இடமாக ஈகிள்டன் ரிசார்ட் மாறியது. இங்கே பல்வேறு கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களின் ஷூட்டிங் நடந்திருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications