கர்நாடகாவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது . கடந்த 28ஆம் தேதி தான் பிக் பாஸ் 12வது சீசன் தொடங்கப்பட்டது. நடிகர் கிச்சா சுதீப் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார் . இந்த முறை ரசிகர்கள் உற்சாகமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டு களிக்க தொடங்கினர். திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது .
ஐசரி கணேஷ் அவர்களுக்கு சொந்தமான வேல்ஸ் குழுமத்திற்கு உட்பட்ட ஜாலிவுட் ஸ்டுடியோ பகுதியில் தான் பிக் பாஸ் 12வது சீசனுக்கு படப்பிடிப்பு என்பது நடைபெற்று வந்தது. ஆனால் இந்த படப்பிடிப்பு நடைபெறக்கூடிய ஜாலிவுட் ஸ்டுடியோவில் கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாகவும் கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து உடனடியாக பிக் பாஸ் படப் பிடிப்பு நடைபெற்று வரக்கூடிய ஜாலிவுட் ஸ்டுடியோவை மூட உத்தரவு பிறப்பித்தனர் . இதனை அடுத்து செவ்வாய்க்கிழமை அன்று அதிகாரிகள் ஜாலிவுட் ஸ்டுடியோவை மூடினர் . அங்கே தங்கி இருந்த 17 போட்டியாளர்கள் மற்றும் 500க்கும் அதிகமான படப்பிடிப்பு கலைஞர்களை வெளியேற்றி சீல் வைத்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுமா என்ற சந்தேகம் இருந்தது .ஒருசாரார் பிக் பாஸ் 12வது சீசன் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் ஒரு சிலர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும் என்றும் கூறி வந்தனர். இதற்கிடையே ஒளிபரப்பு நிறுவனமும் தயாரிப்பு நிறுவனமும் வேறு இடத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
இந்த சூழலில் தான் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வினை கண்டு இருக்கிறார் . இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் துணை முதலமைச்சர் சிவக்குமார் தெற்கு பெங்களூருவின் துணை ஆணையரை நான் தொடர்பு கொண்டு இருக்கிறேன் , ஜாலிவுட் ஸ்டுடியோவிற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றுமாறு நான் கூறியிருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
இங்கு தான் பிக் பாஸ் கன்னடா சூட்டிங் நடைபெற்ற வருகிறது, சுற்றுச்சூழல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்கு தான் முதல் முன்னுரிமை தற்போதைக்கு ஜாலிவுட் நிறுவனத்திற்கு நிறுவனத்தின் மீது என்னென்ன புகார்கள் முன்வைக்கப்பட்டு இருக்கிறதோ அவற்றையெல்லாம் அவர்கள் சரி செய்வதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடகாவில் இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் தொடர்ந்து நடைபெறுவது மாநிலத்தின் முதலீடு சம்பந்தப்பட்ட பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முக்கியம் என்றும் அதேவேளையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் அரசு கவனமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுதீப் துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் .
வெள்ளிக்கிழமை முதல் வழக்கம் போல நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என பிக் பாஸ் கன்னடா தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 17 போட்டியாளர்களும் மீண்டும் அந்த படப்பிடிப்பு அரங்கிற்கு திரும்பியுள்ளனர். இதனால் ரசிகர்களும் என்டர்டெயின்மென்டுக்கு தயாராகியுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications