Bigg Boss: அடேங்கப்பா.. சௌரவ் கங்குலி-யின் பிக்பாஸ் சம்பளத்தை பாத்தீங்களா.. நம்ம விஜய் சேதுபதிக்கே ஷாக்..!

இந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. போட்டியாளர்கள் இடையே ஏற்படும் வாக்குவாதம், சண்டை, எதிர்பாராத திருப்பங்கள் என சுவாரஸ்யமான நிகழ்வுகள் கொண்டதாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இதற்கு டிஆர்பி எகிறும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை விட அதிக கவனம் ஈர்ப்பது நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தான். தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முன்பு கமலஹாசன் இருந்தார் தற்போது விஜய் சேதுபதி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். அந்த வகையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என தெரிந்து கொள்ளலாம்.

Bigg Boss: அடேங்கப்பா.. சௌரவ் கங்குலி-யின் பிக்பாஸ் சம்பளத்தை பாத்தீங்களா.. நம்ம விஜய் சேதுபதிக்கே ஷாக்..!

விஜய் சேதுபதி : கமல்ஹாசன் விலகியதை அடுத்து, பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை நடிகர் விஜய் சேதுபதி ஏற்று கொண்டார். சீசன் 8-க்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். விஜய் சேதுபதி ஒரு வீக் எண்ட் எபிசோடிற்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் முழு சீசனுக்கான அவரது மொத்த சம்பளம் தோராயமாக 75 கோடி முதல் 80 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சல்மான் கான்: பிக்பாஸ் இந்தி பதிப்பின் முகமாக விளங்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், சீசன் 4 முதல் தொடர்ந்து இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் பிக்பாஸ் 20 நிகழ்ச்சியை அவரே தொகுத்து வழங்குகிறார். அந்த வகையில் சல்மான் கான் இந்த முழு சீசனுக்கும் தோராயமாக 120 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. சில ஊடகங்கள் அவர் 200 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குவதாக கூறுகின்றன.

Bigg Boss: அடேங்கப்பா.. சௌரவ் கங்குலி-யின் பிக்பாஸ் சம்பளத்தை பாத்தீங்களா.. நம்ம விஜய் சேதுபதிக்கே ஷாக்..!

நாகார்ஜுனா : பிக்பாஸ் தெலுங்கு பதிப்பினை நடிகர் நாகார்ஜுனா, 2019 முதல் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2025-ஆம் ஆண்டு சீசனுக்காக அவர் சுமார் 35 கோடி ரூபாய் பெற்றதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நடந்து வரும் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 10-க்காக அவரது சம்பளம் 40 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read

மோகன்லால் : பிக்பாஸ் மலையாள பதிப்பின் தொடக்க காலம் முதலே அதன் முகமாக திகழும் முன்னணி நடிகர் மோகன்லால், இந்த ஆண்டும் சீசன் 8-ஐ தொகுத்து வழங்குகிறார். மோகன்லால் முழு சீசனுக்கும் தோராயமாக 30 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

கிச்சா சுதீப் : கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் தவிர்க்க முடியாத முகமான கிச்சா சுதீப் திகழ்கிறார். தொடர்ந்து 13ஆவது ஆண்டாக இந்த சீசனையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார். சுதீப் இந்த புதிய சீசனுக்காக சுமார் 20 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாக சொல்லப்படுகிறது.

சௌரவ் கங்குலி : நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள பிக்பாஸ் பங்களா சீசன் 3 நிகழ்ச்சியை இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவர் ஒட்டுமொத்தமாக 125 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை பெறுவதாக கூறப்படுகிறது.

Recommended For You

அந்த வகையில் பிக்பாஸ் தொகுப்பாளர்களில் அதிக சம்பளம் பெறும் நபராக சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார், இரண்டாம் இடத்தில் கங்குலியும் மூன்றாம் இடத்தில் விஜய் சேதுபதியும் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் முக்கியமான ஒரு ரியாலிட்டி ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி மாறி இருப்பதால் இதற்கு விளம்பரதாரர்கள் ஆண்டு தோறும் கூடி கொண்டே செல்கிறார். ஜியோஸ்டார் நிறுவனத்தின் கீழ் இந்த முறை அனைத்து ஆறு மொழி பதிப்புகளுக்கும் சேர்த்து 95-க்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள் கைகோர்த்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கமாக செப்டம்பரில் தொடங்கும். 100 நாட்களுக்கும் மக்களுக்கு இது தான் எண்டரெயின்மெண்ட் சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+