பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. இந்தி, தமிழ், கனடா என பல்வேறு மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது .
பிக்பாஸ் நிகழ்ச்சி: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டாலே அடுத்த மூன்று மாதங்களுக்கு ரசிகர்களுக்கு பெரிய அளவிலான என்டர்டெயின்மெண்ட் தான். ஒரு நாள் கூட தவறாமல் இவற்றை பார்க்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து தான் வருகிறது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலேயே அதிக டிஆர்பி ரேட்டிங் கொண்ட நிகழ்ச்சியாக அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் இருக்கிறது.

12ஆவது சீசன் : கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது . கடந்த மாதம் 28ஆம் தேதி 12ஆவது பிக்பாஸ் சீசன் தொடங்கியது. நடிகர் கிச்சா சுதீப் தான் இந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஸ்டூடியோ தெற்கு பெங்களூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பிடாடி என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஐசரி கணேஷுக்கு சொந்தமான இடம்: இது ஐசரி கணேஷுக்கு சொந்தமான வேல்ஸ் ஸ்டுடியோக்கு சொந்தமான ஒரு இடமாகும். வேஸ்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஜாலி வுட் ஸ்டூடியோஸ் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் இங்கே தான் தங்கி இருக்கின்றனர். இங்கு தான் ஷூட்டிங்கும் நடக்கிறது. கிட்டதட்ட 12 சீசன்களும் இங்கே தான் ஷூட் செய்யப்படுகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை: இந்த சூழலில் தான் திடீரென கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக இந்த பிக் பாஸ் ஸ்டுடியோவை மூட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டி கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. இது கன்னட மொழியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கக்கூடிய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .
விதிமீறல்: கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு இருக்கக்கூடிய அதிகாரப்பூர்வ அறிக்கையில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் ) 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம்) 1981 ஆகிய இரண்டின் கீழ் இந்த இடத்திற்கு தேவையான ஒப்புதல் மற்றும் செயல்பாட்டிற்கான ஒப்புதல் பெறாமல் இந்த நிறுவனம் பெரிய அளவிலான பொழுதுபோக்கு மற்றும் ஸ்டுடியோ செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
விளக்கம் தர ஆணை: நீர் சுத்திகரிப்பு , கழிவு மேலாண்மை மோசமாக இருப்பதாகவும் அதிகாரிகள் ஆய்வில் இந்த விதிமீறல்களை கண்டறிந்ததை அடுத்து இந்த அரங்கத்தை உடனடியாக மூட வேண்டும் என்றும் உத்தரவிடுவதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய விளக்கத்தை மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறோம் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .
மின் இணைப்பு துண்டிப்பு: இது தொடர்பாக ராம நகர மாவட்டத்தின் துணை கமிஷனருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் , இந்த ஸ்டுடியோவுக்கான மின் இணைப்பை துண்டித்து நிகழ்ச்சி ஷூட்டிங் தொடர தடை விதிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .


Click it and Unblock the Notifications