நிதி மோசடிகள், பணச் சலவை மோசடிகளைக் குறைக்க அரசு எவ்வளவு முடிவு செய்தாலும், புதுசு புதுசா பல வகையில் மோசடிகள் நடந்து வருகிறது. இப்படிப் போலி வைரத்தை வைத்து பெரும் மோசடிகள் சர்வதேச அளவில் நடந்துள்ளதைச் சுங்கவரி துறை கண்டுபிடித்துள்ளது.
இந்தியா மற்றும் ஹாங்காங் நாட்டின் சுங்கத் துறைகள் ஒன்றாக இணைந்து மாபெரும் பணமோசடி வலையமைப்பை கண்டுபிடித்துள்ளது.

இந்த மோசடி கும்பல் ஹாங்காங்-ல் இருந்து மலிவான செயற்கை வைரங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்துவிட்டு, விலை உயர்ந்த வைரங்களை வாங்குவதாகக் கூறி இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நாணயங்களை அதிகளவில் வெளியேற்றி வருகிறது என்று நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அதாவது 10000 ரூபாய் மதிப்புள்ள வைரத்தை 10 லட்சம் என மதிப்பிட்டு இந்தியாவில் இறக்குமதி செய்வதாக அறிவித்துவிட்டு, இதற்காக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயத்தை நிலையான வங்கி வலையமைப்பு வாயிலாகவே அனுப்பப்பட்டு, இதன் மூலம் பணச் சலவை வெளிநாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பெயர் தான் Trade-Based Money Laundering.
இந்த மோசடியில் ஹாங்காங்கில் இருந்து செயற்கை வைரங்களை உண்மையான வைரங்கள் என்று கூறி இறக்குமதி செய்வதில் இந்திய வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளனர், இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் இந்திய இறக்குமதியாளர்கள் தொடர்புடைய வர்த்தக அடிப்படையிலான பண மோசடி ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயக்கி வருவதைக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்திய சுங்க துறை மற்றும் ஹாங்காங் சுங்க துறை மத்தியிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தின் முன்மாதிரியாக இந்த வழக்கு அமைந்துள்ளது என்று நிதி அமைச்சக அறிக்கை கூறியது.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) வெளிநாட்டு நாணயத்தை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் இலக்குடன், போலியான வைரத்தை 100 மடங்கிற்கு மேல் விலைமதிப்போடு இறக்குமதி செய்யப்பட்டு, பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதைக் கண்டறிந்தது.
இந்த விசாரணையில், இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனம் ஹாங்காங் மற்றும் வேறு சில நாடுகளுக்கு வைரங்கள் பதித்த நகைகளை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்படி ஏற்றுமதி செய்யப்பட்ட வைர நகைகளின் மதிப்பு இறக்குமதி செய்யப்பட்ட வைரங்களின் மதிப்பில் வெறும் 0.2 சதவீதம் தான். இதன் மூலம் பணச் சலவை சர்வதேச அளவில் நடப்பது கண்டறியப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications