TCS கிருதிவாசன்-க்கு புதிய சவால்.. டிசிஎஸ் உயர்மட்ட நிர்வாகத்தில் பெரும் மாற்றம்..!

சர்வதேச வங்கி நெருக்கடியால் இந்திய ஐடி நிறுவனங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டு வரும் வேளையில், அக்சென்சர் நிறுவனத்தின் 19000 ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மத்தியில் டிசிஎஸ், டெக் மஹிந்திரா ஆகிய 2 முன்னணி ஐடி சேவை நிறுவனத்தில் தலைமை மாற்றம் கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

டிசிஎஸ் சிஇஓ-வாக பதவியேற்றியுள்ள கிருதிவாசன் அவர்களுக்கு அடுத்தடுத்து பெரும் சவால்கள் நிறைந்துள்ளது, இதனால் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி தொடர்ந்து வேகமாக வளர்ச்சி பாதையை தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி உருவாகியுள்ளது.

இதற்கு ஏற்றார் போல் உயர்மட்ட நிர்வாகத்தில் பெரும் மாற்றம் உருவாக உள்ளதால், டிசிஎஸ் முதலீட்டாளர்கள் பல விஷயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ பதவியை ராஜேஷ் கோபிநாதனிடம் இருந்து இந்நிறுவனத்தின் BFSI பிரிவின் தலைவராக இருந்த கிருதிவாசன்-க்கு கொடுக்கப்பட்டது. சென்னையில் இருந்து பணியாற்றி வரும் கிருதிவாசன் சிஇஓ பதவியேற்றிய நிலையில் மும்பைக்கு செல்ல உள்ளார்.

CTO, COO மாற்றம்

CTO, COO மாற்றம்

இதை தொடர்ந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் தலைமை இயக்க அதிகாரி பதவிகளில் இருப்பவர்கள் அடுத்த ஒரு வருட காலத்திற்குள் ஓய்வு பெற உள்ளனர். இதனால் டிசிஎஸ் உயர்மட்டத் தலைமையின் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ள போகிறது.

கே அனந்த் கிருஷ்ணன் - CTO

கே அனந்த் கிருஷ்ணன் - CTO

தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் கே அனந்த் கிருஷ்ணன் அக்டோபர் மாதம் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து இப்பதவியில் தற்போது தலைமைச் சேவை கண்டுபிடிப்பு அதிகாரியாக ( chief services innovation officer ) இருக்கும் ஹாரிக் மயங்க் வின் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது.

 என் கணபதி சுப்பிரமணியம் - COO

என் கணபதி சுப்பிரமணியம் - COO


டிசிஎஸ் நிறுவனத்தில் அதிக அனுபவம் கொண்ட என் கணபதி சுப்பிரமணியம் தனது தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) பதவியில் இருந்து மே 2024 இல் ஓய்வு பெறுவதால், டிசிஎஸ் நிறுவன வளர்ச்சி வணிகத்தின் தலைவரான கிருஷ்ணன் ராமானுஜம் இப்பதவிக்கு போட்டி போடுபவர்களில் முன்னணியில் உள்ளார்.

COO பதவிக்கு போட்டி

COO பதவிக்கு போட்டி

இதேவேளையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பெரிய நீண்ட கால வாடிக்கையாளர்களின் விரிவாக்கத்தை மேற்பார்வையிடும் business transformation group-ன் தலைவரான தேபாஷிஸ் கோஷ் மற்றும் relationship incubation group-ன் தலைவர் சுசீல் வாசுதேவன் ஆகியோரும் COO பதவிக்கு போட்டியாளர்களாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

BFSI பிரிவு புதிய தலைவர்

BFSI பிரிவு புதிய தலைவர்

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளராக இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வர்த்தக பிரிவான வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுக்கு (BFSI) பிரிவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

கே.கிருதிவாசன் இடத்திற்கு போட்டி

கே.கிருதிவாசன் இடத்திற்கு போட்டி

இப்பதவியில் இருந்த கே.கிருதிவாசன் இடத்திற்கு நியமிக்க டிசிஎஸ் நிர்வாகம் 4 முதல் 5 பேரை தேர்வு செய்து தயாராக வைத்துள்ளது, ஆனால் இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ரிது ஆனந்த் ராஜினாமா

ரிது ஆனந்த் ராஜினாமா

இதுமட்டுமா டிசிஎஸ் நிறுவனத்தின் leadership மற்றும் diversity officer ஆக இருக்கும் ரிது ஆனந்த், மார்ச் மாத இறுதியில் ஓய்வு பெறும் வேளையில் அமெரிக்காவை சேர்ந்த Preeti D'mello இப்பதவியில் அமரப்போகிறார். Preeti D'mello தற்போது diversity, inclusion மற்றும் equity பிரிவின் துணை தலைவராக உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+