மதுபானத்திற்கு முழு தடை.. பீகாரில் நடந்ததை பாருங்க.. தமிழ்நாட்டுக்கு ஒரு உதாரணம்..!!

மதுபான விற்பனையைக் குறைப்பது குறித்தும், டாஸ்மாக் கடைகள் மூடுவது குறித்தும் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பேசப்பட்டு வந்தாலும், தமிழ்நாட்டில் சற்று அதிகமாகவே பேசப்படுவதோடு, இது முக்கிய அரசியல் விவாதமாக உள்ளது.

இந்த நிலையில் பீகாரில் 2016 ஆம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தால் அம்மாநிலத்தில் குடிப்பழக்கம் குறைந்துள்ளதோடு, குடும்ப வன்முறை குற்றங்களும் குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மதுபானத்திற்கு முழு தடை.. பீகாரில் நடந்ததை பாருங்க.. தமிழ்நாட்டுக்கு ஒரு உதாரணம்..!!

தி லான்செட் ரிஜனல் ஹெல்த் - தென்கிழக்கு ஆசியா இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரையின்படி, பீகாரில் 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மதுவிலக்கு சட்டத்தால், தினசரி மற்றும் வாராந்திர அளவில் மது அருந்தும் 24 லட்சம் சம்பவங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் மனைவி மீதான தாக்குதல், குடும்ப வன்முறை தாக்குதல் சம்பவங்கள் 21 லட்சமும் தடுக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பன்னாட்டு உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (The International Food Policy Research Institute) வறுமை, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, தேசிய மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார மற்றும் குடும்ப கணக்கெடுப்பு தரவுகளை ஆய்வு செய்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

"கடுமையான மது ஒழுங்குபடுத்தல் கொள்கைகள், அடிக்கடி மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, துணைவியார் மீதான வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளது. இதன் வாயிலாகப் பல கட்டத்தில் சுகாதார மேம்பாடு நடந்துள்ளது" என்று ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏப்ரல் 2016 இல், பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம், மாநிலம் முழுவதும் மதுபான உற்பத்தி, போக்குவரத்து, விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் கிட்டத்தட்ட முழுவதுமாக நிறுத்தியது.

திடீரென அமல்படுத்தப்பட்ட இந்த சட்டமும், அதன் கடுமையான அமலாக்கம் காரணமாக, இந்த மதுவிலக்கு சட்டம் பெரிய அளவிலான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 3, -4 மற்றும் -5 ஆகியவற்றின் தரவுகள் இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்பட்டுள்ளன.

"மதுவிலக்குக்கு முன்பு, பீகாரில் ஆண்களின் அடிக்கடி மது அருந்துதல் விகிதம் 9.7 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்தது, அதே சமயம் அண்டை மாநிலங்களில் இது 7.2 சதவீதத்திலிருந்து 10.3 சதவீதமாக அதிகரித்தது.

மதுவிலக்குக்குப் பிறகு, இந்த போக்கு தலைகீழாக மாறின, பீகாரில் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறை மது அருந்துதல் விகிதம் 7.8 சதவீதமாகக் குறைந்தது, அதே சமயம் அண்டை மாநிலங்களில் இது 10.4 சதவீதமாக உள்ளது.

இந்த தடையால் பீகார் மாநிலத்தில் அதிகமாக மது அருந்துவோர் எண்ணிக்கை, குடும்ப வன்முறை குறைந்தது மட்டும் அல்லாமல் பீகாரில், அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது, குறை எடை கொண்ட ஆண்களின் எண்ணிக்கை 4 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதே நேரம், அதிக எடை அல்லது பருமன் கொண்ட ஆண்களின் எண்ணிக்கை 5.6 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் பீகாரில் மதுவிலக்கு சட்டத்தின் சாத்தியமான நன்மைகளை ஆதாரத்துடன் எடுத்துரைக்கின்றன. இருப்பினும், மதுவிலக்கு சட்டத்தின் நீண்டகால தாக்கங்கள் மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து மேலும் ஆராய்ச்சி தரவுகள் கட்டாயம் தேவை.

மேலும் இந்த ஆய்வின் முடிவுகள் பிற இந்திய மாநிலங்களில் இதேபோன்ற மதுவிலக்கு சட்டத்தைப் பரிசீலிக்கும் வாய்ப்பை கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+