பீகாரில் அரசு அதிகாரிகளின் வீட்டில் அமலாக்க இயக்குனரகம் நடத்திய அதிரடி சோதனையில் கோடிக்கணக்கான ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை ஊழல் தொடர்பான புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில் பல உயர் அதிகாரிகள்.. அவர்களோடு சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகள் குறித்த விபரங்களும் தெரியவந்துள்ளன. இந்த சம்பவம் பீகார் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பீகார் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஹான்ஸ் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் சில முக்கிய நபர்கள் சிக்கினர். அவர்கள் வீட்டிலும் நடந்த சோதனையில் ரூ. 11.64 கோடி மதிப்புள்ள பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாட்னாவில் ஏழு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. பீகார் கட்டுமான துறையின் தலைமை பொறியாளர் தாரணி தாஸ், பீகார் அரசின் நிதித் துறையின் இணைச் செயலாளர் முமுக்ஷு சவுத்ரி, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி துறையின் நிர்வாக அதிகாரி உமேஷ் குமார் சிங் உள்ளிட்ட பலர் இந்த சோதனையில் சிக்கினர்.

பீகார் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் அயாஸ் அகமது, பீகார் மருத்துவ சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் துணைத் தலைவர் சாகர் ஜெய்ஸ்வால், துணைத் தலைவர் விகாஷ் ஜா, மற்றும் பீகார் கட்டுமானத் துறையின் நிர்வாகப் பொறியாளர் சாகேத் குமார் ஆகியோரிடமும் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த அதிகாரிகள் டென்டர்களின் மூலம் பலரிடமிருந்து லஞ்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இவர்களிடம் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 11.64 கோடி ரொக்கம், ஏராளமான சொத்து ஆவணங்கள், லஞ்ச பணத்தை பகிர்ந்த சில ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆனால் யாருடைய வளாகத்தில் இருந்து எவ்வளவு பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தொடர்ந்து எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்த சோதனையில் நான்குக்கும் மேற்பட்ட பணமென்னும் இயந்திரங்களை பயன்படுத்தி அதிகாரிகள் பணத்தை எண்ணியுள்ளனர். எடுக்க எடுக்க குறையாத அளவுக்கு பணம் மற்றும் ஆவணங்களால் அதிகாரிகள் மாட்டிக் கொண்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி சோதனைகள், பீகார் மாநிலத்தில் அரசு நிர்வாகிகள் ஊழல் செய்திருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் தொடர் விசாரணை, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள், அரசு நிர்வாகத்தில் நேர்மையை நிலைநாட்டவும், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications