இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி பெரும் எச்சரிக்கையுடன் உள்ளனர். நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது, இது நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை சோதிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இன்க்ரெட் எக்விட்டீஸ் என்ற புரோக்கரேஜ் நிறுவனத்தின் ஆய்வாளர்கள், தற்போதைய என்டிஏ (பாஜக தலைமையிலான கூட்டணி) அரசு பீகாரில் தோல்வியடைந்தால், மத்தியில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கின்றனர்.
இது நடந்தால், நிஃப்டி இன்டெக்ஸ் போன்ற முக்கிய குறியீடுகளில் 5 முதல் 7 சதவீதம் வரை குறுகிய கால சரிவை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரித்துள்ளனர். மேலும் இது போன்ற நிகழ்வுகள் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ள போதிலும், இத்தகைய அரசியல் தடுமாற்றம் பங்குச்சந்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எப்படி மத்தியில் ஆட்சி மாறும்..? பங்குச்சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும்..?

எளிய உதாரணம்:
அரசியல் தடுமாற்றாத்தால் பங்குச் சந்தையில் எப்படி பாதிக்கும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்துடன் புரிந்துகொள்ளவோம், ஒரு வீட்டை வாங்குவதை கற்பனை செய்யுங்கள். அந்தப் பகுதியில் பாதுகாப்பு நன்றாக இருக்குமா அல்லது வரி திடீரென உயருமா என்ற சந்தேகம் இருந்தால், நீங்கள் அந்ச வீட்டை அடித்து பேசி குறைந்த விலைக்கு தானே வாங்குவீர்கள். அதேபோல், என்டிஏ பீகாரில் தோற்றால், நிதீஷ் குமார் அல்லது சந்திரபாபு நாயுடு போன்ற பிராந்தியத் தலைவர்கள் தலைமையிலான புதிய கூட்டணி மத்தியில் அமையலாம்.
மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால் பெரிய பொருளாதாரத் திட்டங்கள் தாமதமாகும். இதனால், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது அதிகரித்து அதன் விலைகள் குறையும். இது நிரந்தர சரிவு அல்ல என்றாலும், சிறிது காலம் ஏற்படும் தற்காலிக இறக்கமாக மட்டுமே இருக்கும்.
பீகார் தேர்தல் ஏன் முக்கியம்:
பீகார் தேர்தல் முடிவுகள் மாநில அளவிலான தாக்கத்தில் மட்டும் இருக்காது, இது 2029 பொது தேர்தலுக்கு ஒரு முன்னோட்ட சோதனையாக உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு நடத்தப்பட்ட எக்சிட் போல்கள், என்டிஏ 243 இடங்களில் 133 முதல் 159 வரை வெல்லும் என்று கணிக்கின்றன. Mahagathbandhan கூட்டணி 75 முதல் 101 இடங்கள் பெறலாம் என்று சாராசரியாக கணிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இந்தக் கணிப்புகள் தவறாக அமைந்து என்டிஏ தோற்றால், மத்தியில் பாஜகவின் வலிமை குறைவதாகக் கருதப்படும். 2024 தேசியத் தேர்தலின் எதிர்பாராத முடிவுகளால் நிஃப்டி ஒரே நாளில் 6 சதவீதம் சரிந்தது போல், இப்போதும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்யலாம், இதனால் ரூபாய் மதிப்பு குறையலாம், பத்திர விலைகளும் குறையாலம். இன்று பங்குச்சந்தை சிறப்பான உயர்வை பதிவு செய்துள்ளது, ஏனெனில் என்டிஏ வெற்றி பெறும் என எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
வரலாற்று என்ன சொல்கிறது?
2024 தேசியத் தேர்தல் எதிர்பாராத முடிவுகளால் நிஃப்டி ஒரே நாளில் 6 சதவீதம் சரிந்தது யாராலும் மறக்க முடியாது, முதலீட்டாளர்கள் கூட்டணி ஆட்சி அபாயத்தை மதிப்பீடு செய்து இப்போது அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
இந்த நிலையில் பீகாரில் தற்போது NDA கூட்டணியில் இருக்கும் பிஜேபி மற்றும் நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டி போடுகின்றனர். இதில் 100 எல்லைத் தொகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இளைஞர் வாக்குகள் 3 முதல் 6 சதவீதம் மாறினால், என்டிஏ 60 இடங்களை இழக்கலாம்.
இதன் மூலம் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் - ஏக்நாத் ஷிண்டே கூட்டணி இந்தியா பிளாக் துணையுடன் மத்தியில் ஆட்சி பிடிக்க வழி வகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காங்கிராஸ் தலைமையிலான இந்தியா பிளாக் கூட்டணி மாநில கட்சிகளை ஒன்றிணைத்து மத்தியில் ஆட்சி அமைக்கலாம். இது பீகார் தொங்கு சட்டசபை வந்தாலும் சரி, மத்தியில் தொங்கு சட்டசபை அமைந்தாலும் நடக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நிஃப்டி இன்டெக்ஸுக்கு என்ன நடக்கும்?
மத்தியில் புதிய கூட்டணி அமைந்தால், நிஃப்டி 5 முதல் 7 சதவீதம் விரைவாக சரியலாம். நூறு ரூபாய் முதலீடு செய்தால் ஐந்து முதல் ஏழு ரூபாய் இழப்பு ஏற்படும். இதேபோல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் அரசு நிறுவனங்கள் தொடர்பான பங்குகள் அதிகம் பாதிக்கப்படலாம், ஏனெனில் இவை அனைத்து மத்திய அரசின் நிலையான கொள்கைகள் மற்றும் நிதி முதலீடுகளை நம்பியுள்ளன.
புதிய அரசு அமையும் பட்சத்தில் உள்கட்டமைப்பு முதலீடு போன்ற தெளிவான திட்டங்களை அறிவித்தால், சந்தை விரைவாக மீண்டு வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு:
இந்த ஏற்ற இறக்கம் பயமாகத் தோன்றினாலும், இது மொத்த விற்பனை கடையில் தள்ளுபடி விற்பனை போன்றது - விலை குறைந்தால் வாங்கி பின்பு அதை பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடையில் விற்று லாபம் பெறலாம். இன்க்ரெட் நிபுணர்கள், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்துகின்றனர்.
என்டிஏ கூட்டணி பீகாரில் வலுவாக வெற்றிப்பெற்றால், கொள்கை அளவில் எவ்விதமான மாற்றமும் ஏற்படாது என்பதால் பங்குச்சந்தை புதிய உச்சத்தைத் தொடும். நவம்பர் 14 வாக்கு எண்ணிக்கையை கவனியுங்கள், ஆனால் பீதி அடைய வேண்டாம், உங்கள் முதலீட்டை சரியான முறையில் பிரித்து பல்வகைப்படுத்தி முதலீடு செய்தால் பெரிய இழப்பில் இருந்து தப்பிக்கலாம்.
More From GoodReturns

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

விஜய் தேர்தல் பிரச்சாரம்: பவுன்சர்கள் கொண்டு செல்லும் கருப்பு பையில் என்ன இருக்கு? இது தான் விஷயமா?

தவெக தலைவர் விஜய்- கிட்ட காஸ்ட்லி சைக்கிள், கார் மட்டுமில்ல இந்த ஒரு ஸ்பெஷல் வண்டியும் இருக்கு தெரியுமா?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!



Click it and Unblock the Notifications