சைபர் குற்றங்கள் அதிரடியாக அதிகரிப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதைத் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாக தற்போது யாருக்கு கால் செய்தாலும் மோசடியை தடுப்பதற்கான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன் அடுத்த கட்டமாக பீகார் அரசு அடுத்த 3 மாதங்களில் 27 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகளை டீ-ஆக்டிவேட் செய்ய முடிவு எடுத்துள்ளது.
பாட்னாவைச் சேர்ந்த BSNL அதிகாரிகளின் கூற்றுப்படி, 27 லட்சம் சிம்கார்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவை அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டாவை, 24 லட்சத்திற்கும் அதிகமானவை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டவை. இப்படி வழங்கப்படும் சிம்கார்டுகளில் பல மோசடிக்காக பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் தங்களுடைய பெயரில் 9 சிம் கார்டுகள் வரை பெற முடியும். அதற்கு மேல் சிம் கார்டுகளைப் பெற்று தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல தெரியாமல் தங்கள் பெயரில் இந்த வரம்பை மீறி யாரேனும் சிம் கார்டுகள் பெற்றுவிட்டால் தங்களுடைய தொலைதொடர்பு ஆப்ரேட்டருக்கு தெரிவித்து உடனடியாக செயலில் உள்ள சிம்கார்டுகளை தேர்வு செய்து மற்றவற்றை டி-ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
ஒருவேளை அவ்வாறு செய்யத் தவறினால் பத்தாவது சிம் கார்டு தானாகவே செயலிழக்கப்படும். இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் விதமாக தற்போது பீகார் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பீகார் முழுவதிலும் அதிகரித்து வரும் மோசடி சம்பவங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் ஆயிரக்கணக்கான தனிநபர்கள் ஒன்பதுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வைத்திருப்பதாகவும், அவற்றில் பல மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சைபர் குற்றவாளிகள் ஒரே அடையாள ஆவணங்களை பயன்படுத்தி பல சிம் கார்டுகளை பதிவு செய்து மோசடி செய்வதாகவும், இதனால் அரசு அதிகாரிகள் தங்கள் செயல்பாடுகளை துரிதப்படுத்தி அவர்களை கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஒரு பயனருக்கு சிம் கார்டு எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது சைபர் குற்றங்களை குறைக்க உதவும் என்று பீகார் அரசு முடிவு செய்துள்ளது. அதோடு இந்த புதிய விதி குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கவும் தொலைதொடர்பு ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"பயனர்கள் தாங்கள் வைத்திருக்க விரும்பும் ஒன்பது சிம் கார்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 90 நாட்களுக்குள் அவர்கள் செயல்படத் தவறினால், அவர்களின் 10-வது சிம் தானாகவே செயலிழக்கப்படும்," என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
பீகாரில் உள்ள நவாடா, நலந்தா, அவுரங்காபாத், கயா, மூங்கர், ஜம்தாரா உள்ளிட்ட பல மாவட்டங்கள் சைபர் மோசடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற பகுதிகளாக உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களை மோசடி செய்ய சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்.
இதனால் பீகார் டிஜிட்டல் மோசடியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. அரசாங்கத்தின் இந்த ஒழுங்குமுறை கொள்கை பீகாரில் சைபர் மோசடி வழக்குகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதோடு தவறாக சிம் கார்டு பயன்படுத்துவதைத் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் புதிய கொள்கையை சுமூகமாக செயல்படுத்தும் விதமாக தொலைத்தொடர்பு துறை, டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications