வெறும் ரூ.1000 முதலீட்டில் துவங்கிய காளான் பிஸ்னஸ்.. இப்போ மாசம் 2 லட்சம் அள்ளும் இளம் பெண்..!!

பெண்கள் பெரும்பாலும் திறமை படைத்தவர்கள் என்று கூறுவார்கள். ஆண்கள் கடின உழைப்பாளிகள் என்றால், பெண்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள். வீட்டில் ஆண்கள் வேலைக்கு சென்று விட்டால், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இருக்கும் மீதி நேரத்தில் என்ன செய்து வருமானம் ஈட்டலாம் என்ற யோசனைகளை வளர்த்தி தானும் சம்பாதிக்க ஆசைப்படுவர். அந்த வகையில்தான் பீகார் மாநிலத்தில் பிரதீபா ஜா என்ற பெண் காளான் வளர்ப்பை வெறும் ரூ.1000 முதலீட்டில் தொடங்கி மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.

பீகார் மாநிலம் தர்பங்காவில் வசிக்கும் பிரதீபா ஜா, தனக்கு திருமணத்திற்குப் பிறகு காளான் வளர்ப்பைத் தொடங்கினார். வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய இந்த காளான் பண்ணையில் இன்று மாதந்தோறும் 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு, இந்த பெண் தனது வேலையின் மீதான ஆசையை வெளிப்படுத்தி, குறுகிய காலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார்.

வெறும் ரூ.1000 முதலீட்டில் துவங்கிய காளான் பிஸ்னஸ்.. இப்போ மாசம் 2 லட்சம் அள்ளும் இளம் பெண்..!!

பிரதீபாவுக்கு 15 வயதாக இருந்தபோது, அவரது தந்தை புற்றுநோயால் இறந்தார். தந்தையின் மறைவிற்குப் பிறகு, அவரது குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதுமட்டுமின்றி பிரதீபாவின் தாயாரும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதிபாவிற்க்கு 16 வயதில் திருமணம் நடந்ததால், திருமணத்தால் 10ம் வகுப்பு படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. திருமணத்திற்குப் பிறகு, பிரதீபா மிர்சாபூர் ஹன்சி கிராமத்திற்கு வந்தார். இங்கே, ஒரு சாதாரண குடும்பத்தைப் போலவே, பிரதிபா நாள் முழுவதும் வீட்டு வேலைகளில் பிஸியாக செய்து வந்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு சிறிது நாட்கள் கழித்து பிரதீபாவின் கணவர் ஹைதராபாத்திற்க்கு மாற்றப்பட்டார். அப்போது அவருடன் பிரதிபா ஹைதராபாத் சென்றார். அவரது மாமியார் உடல்நிலை சரியில்லாததால், பிரதீபா தனது மாமியார் வீட்டிற்கு திரும்ப வேண்டியிருந்தது. இங்கு பிரதிபாவுக்கு ஒரு விளம்பரத்தில் இருந்து காளான் வளர்ப்பு யோசனை கிடைத்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்த பிரதீபாவுக்கு, தன் அப்பா விவசாயத் துறையில் வேலை பார்த்து, பல காளான் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது. இங்கிருந்துதான் காளான் விவசாயம் செய்ய பிரதீபா முடிவு செய்தார்.

பொதுவாக, கிராமத்துப் பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் விவசாயத்தை மேற்கொள்ளும் பிரதீபாவின் முடிவு அவரது கணவரால் ஏற்றுகொள்ளப்பட்டது. இதற்காக, பிரதீபா முதலில் தர்பங்கா விவசாயத் துறையை நாடினார். அங்குள்ள அதிகாரிகள், பிரதீபாவை பீகார் வேளாண் பல்கலைக்கழகம், சபோர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிற்சிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி அவர் காளான் வளர்ப்பு பற்றி பிரதீபா கற்றுக்கொண்டார்.

காளான் வளர்ப்பு பயிற்சிக்குப் பிறகு, பிரதீபா ஒரு கிலோ காளான் ஸ்பான் (விதைகள்) பெற்றார். இது தவிர மேலும் 4 கிலோ விதைகளை பிரதீபா ரூ.600க்கு வாங்கினார். இப்போது பிரதீபா 5 கிலோ விதைகளுடன் வீட்டில் உள்ள காலி இடத்தில் 50 மூட்டை காளான் விதைகளை நட்டு வைத்துள்ளார். அவற்றுடன் 400 முதலீட்டில் நெல் வைக்கோல் மற்றும் பாலி பைகளை வாங்கி இன்று பிரதீபா மூன்று வகையான காளான்களை பயிரிடுகிறார். இதனுடன் காளான் முட்டையும் தயார் செய்யப்படுகிறது. வெறும் ரூ.1000 முதலீட்டில் தொடங்கிய பிரதீபா இன்று இந்த தொழிலின் மூலம் மாதந்தோறும் 2 லட்சம் சம்பாதிக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+