உலகின் மிக உயரமான கட்டிடம் என்றாலே நம் நினைவுக்கு வருவது துபாயின் புர்ஜ் கலிபா தான். துபாய் சென்று எப்படியாவது இந்த கட்டடத்தை காண வேண்டும் என ஆசைப்படாதவர்களே இருக்க முடியாது.
இந்தியாவிலும் தற்போது ஒரு புர்ஜ் கலிபா கட்டப்பட்டுள்ளது. எங்கு? யாரால் கட்டப்பட்டது என்பதை விரிவாக பார்க்கலாம்.

துபாயின் புர்ஜ் கலிபா: பீகாரின் புர்க் கலிபாவை அறிவதற்கு முன்பு உண்மையான புர்ஜ் கலிபாவை அறிந்து கொள்ளலாம். உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, துபாயில் உள்ளது.
இதன் உயரம் 828 மீட்டர் (2,716 அடி ) இக்கட்டடத்தில் உலகின் தலைசிறந்த நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் துவங்கி 2010ம் ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது.
பீகாரின் புர்ஜ் கலிபா: சமூகவலைதளங்களில் பீகாரின் புர்ஜ் கலிபா என்ற வீடியோ வைரலாகி வருகிறது. பீகார் மாநில முசாபர்பூரில் கட்டப்பட்டுள்ள ஒரு கட்டடத்தை தான் பீகாரின் புர்ஜ் கலிபா என்றழைக்கின்றனர். இப்போது பீகாரில் இது தான் ஹாட் டாபிக். உள்ளூர் மக்கள் பலரும் அதிசயமாக பார்த்து செல்லும் கட்டடமாகவும் இது மாறியுள்ளது.
6 அடி நிலத்தில் அடுக்குமாடி கட்டடம்: வெறும் 6 அடி நிலத்தில் 5 அடுக்குமாடி கட்டடத்தை கட்டியுள்ளனர். 6 அடி நிலத்தில் வீடா, அதுவும் அடுக்குமாடி வீடா என வியக்க வைக்கிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் இந்த வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன.
படுக்கையறை, கழிவறை, சமையலறை என சகல வசதிகளுடனும் வீட்டினை திட்டமிட்டு வடிவமைத்துள்ளனர். மொத்த நிலம் 6 அடி வீட்டின் அளவு 5 அடி என்ற மதிப்பீட்டில் வீட்டை இரண்டாக பிரித்து முதல் பகுதியில் படிக்கட்டுகள், இரண்டாவது பகுதியில் அறைகள் என கட்டியுள்ளனர்.
இந்த வீடு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து உள்ளூர் மக்கள் அதிசயமாக வந்து இந்த வீட்டினை பார்த்து செல்கின்றனர். இதனால் இங்கு விசிட்டர்ஸ் வருகையே களைக்கட்டுகிறது. அதுமட்டுமல்ல , இந்த வீட்டினை வடிவமைத்தவர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications