தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் எத்தகைய திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கும் என்பதில் மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் இருக்கும் வேளையில் பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டம் நாட்டு மக்களின் முக்கிய பேசு பொருளாக உள்ளது.
பீகார் மாநிலத்தில் பெண்கள் சுயதொழில் துவங்கவும் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 'முக்யமந்திரி மஹிலா ரோஜ்கார் யோஜனா' திட்டத்தின் கீழ் மிகப்பெரிய அளவில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இன்று பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், 25 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா 10,000 ரூபாய் என்ற விகிதத்தில் மொத்தம் 2,500 கோடி ரூபாயை நேரடி பயனாளி பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கினார்.
இத்திட்டம் பெண்களை சுயமாக வாழவும், சிறு தொழில்களைத் தொடங்குவதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் 1.81 கோடி பெண்களுக்கு இதேபோன்ற 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை சரியாகப் பயன்படுத்தி தொழில் தொடங்கிய பெண்களுக்கு விரைவில் கூடுதலாக 2 லட்சம் ரூபாய் வரை உதவி வழங்கப்படும்.
மத்திய பிரதமர் நரேந்திர மோடி 2025 செப்டம்பர் மாதத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இது ஜீவிகா சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து இத்திட்டம் ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் நிதியுதவி வழங்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் சமீபத்தில் இத்திட்டத்தின் கீழ் 10000 ரூபாய் பெற்று வர்த்தகத்தை துவங்கிய தகுதியான பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கூடுதல் நிதி உதவி வழங்கும் நடைமுறையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு கோணத்தில் பார்க்கும்போது, இந்தப் பீகார் திட்டத்தை போல் பெண்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது. இதை மேலும் விரிவாக்கும் முயற்சியில் வர்த்தகத்தை துவங்குவதற்கு 10000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் இத்தகைய திட்டத்தை கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் பெண்களின் சுயதொழில், சிறு வணிகங்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும்.
பீகாரைப் போலவே DBT மூலம் நேரடியாக பெருமளவு பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தினால், தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார பங்கீடும், அவர்களின் நிதி சுதந்திரம் வேகமாக அதிகரிக்கும். இத்தகைய திட்டத்தை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியுமா என்பது அடுத்து முக்கியமான கேள்வியாக உள்ளது.
இத்திட்டத்தில் பெண்கள் தங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கு சிறு கடை, தையல், உணவு தயாரிப்பு போன்ற தொழில்களைத் தொடங்கலாம். இது கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு மிகுந்த பயனளிக்கும். பீகாரில் இத்திட்டம் ஏற்கெனவே 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு முதல் கட்ட உதவியை வழங்கியுள்ளது. இப்போது கூடுதலாக 25 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications