40000 கோடி முதலீட்டை அள்ளும் பீகார்! தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது

தமிழ்நாட்டு அரசு ஜனவரி 7, 8 ஆம் தேதி உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு நடக்க உள்ள நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு எவ்வளவு முதலீட்டை ஈர்க்க போகிறது என கூர்ந்து கவனித்து வருகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை தொடங்கிய இரண்டு நாள் பீகார் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் அம்மாநிலம் சுமார் 34,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த முதலீட்டிற்காக பீகார் மாநிலம் சுமார் 40 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

40000 கோடி முதலீட்டை அள்ளும் பீகார்! தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது

உச்சிமாநாட்டில் இருந்து 40,000 கோடி ரூபாய் முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உச்சிமாநாட்டின் தொடக்க நாளில், மான்டே கார்லோ, ஹை ஸ்பிரிட் கமர்ஷியல் வென்ச்சர்ஸ் மற்றும் கோமல் குரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் மாநிலத்தில் தங்கள் முதலீட்டு நோக்கங்களை அறிவித்தன.

உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் முதல் நாளில் எட்டு நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.554.4 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தற்போது பெறப்பட்டு உள்ள முதலீடுகளில் சாவி லெதர்ஸ் மூலம் ரூ.274 கோடி, கோமல் டெக்ஸ்பேப் மூலம் ரூ.100.5 கோடி, மா பிரபாவதி டெக்ஸ்டைல் ​​மில்ஸ் மூலம் ரூ.94 கோடி, காஸ்மஸ் லைஃப்ஸ்டைல் ​​பிரைவேட் லிமிடெட் மூலம் ரூ.52 கோடி, பார்தி எக்சிம் பிரைவேட் லிமிடெட் மூலம் ரூ.15 கோடி ஆகியவை அடங்கும்.

தமிழ்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, மக்களின் தனிநபர் வருமானம் வரையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான துவக்கமாக, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாட்டின் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு நடக்க உள்ளது.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பல மாதங்களாக நடந்து வரும் வேளையில், தமிழ்நாடு அரசு இந்த கூட்டத்தில் அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற இலக்குடன் முதல்வர் முக ஸ்டாலின் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என அனைத்து பிரிவுகளிலும், அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு அரசு பணியாற்றி வரும் வேளையில் இந்த முதலீட்டு மாநாடு மாநிலத்தின் பொருளாதாரம், உற்பத்தி, வேலைவாய்ப்புக்கு முக்கிய வளர்ச்சி வாய்ப்பை தரும் என நம்பப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+