இந்தியாவின் பிரபலமான ஸ்வீட் மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பிகானர்வாலாவின் நிறுவனர் 86 வயதான லாலா கேதார்நாத் அகர்வால். நவம்பர் 13 அன்று காலமானார். பிகனெர்வாலாவின் உரிமையாளரான அகர்வால், பழைய டெல்லியில் புஜியா மற்றும் ரசகுல்லாக்களை கூடைகளில் கொண்டு சென்று மக்களிடம் விற்றார்.
பிகானர்வாலா நிறுவனத்தை தெரு தெருவாக சென்று விற்ற காலத்தில் இருந்து இப்போது அவரது தொழில் இப்போது ரூ.1300 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது. தற்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கடைகள் உள்ளன.

அகர்வாலின் தொழில் பயணம் தில்லியில் தொடங்கியது. அவரது குடும்பம் பிகானரை பூர்வீகமாகக் கொண்டது. அங்கு 1905ஆம் ஆண்டிலிருந்து ஸ்வீட் கடையை அகர்வால் நடத்தி வந்தார். அந்தக் கடையின் பெயர் பிகானர் நம்கீன் பண்டர். அகர்வாலும் அவரது சகோதருமான சத்யநாராயணன் அகர்வாலும் 1950களின் தொடக்கத்தில் தில்லிக்கு குடிபெயர்ந்தனர்.
தொடக்கத்தில் அவர்களது தொழிலில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்தனர். பழைய தில்லியில் பக்கெட்களில் புஜியா, ரசகுல்லாக்களை கொண்டு சென்று தெருத்தெருவாக கூவி விற்றனர். இரவு பகல் பாராமல் இருவரும் அயராமல் உழைத்தனர். விரைவிலேயே அவர்களது பட்சணங்களின் தனித்துவமான சுவையால் வியாபாரம் பெருகத் தொடங்கியது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றனர்.
பின்னர் தில்லியில் உள்ள சாந்தினி சௌக்கில் ஒரு ஸ்வீட் ஸ்டாலை திறந்தனர். டால் ஹல்வா, பிகானர் புஜ்ஜியா, காஜு கட்டி போன்ற பட்சணங்களை தயாரித்து விற்றனர். இந்நிலையில் அவர்களது பிக்கானர் வாலா கடை பிரபலமானது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிக்கானர்வாலா கடை விரித்தது. அந்தக் கடைகளில் விதவிதமான புதிய ஐட்டங்களும் சேர்த்து விற்கப்பட்டன.
தில்லி, நோய்டா போன்ற பகுதிகளில் மட்டும் ஏராளமான கிளைகளை பிக்கானர்வாலா தொடங்கியது. பிக்கானர்வாலாவின் ஸ்வீட்கள் அனைத்துமே மிகவும் சுவையாக இருந்ததால் தீபாவளி, வீட்டு சுபகாரியங்கள், பல கார்ப்பரேட் அலுவலகங்களின் விழாக்களில் ஏராளமான அளவில் வாங்கப்பட்டது.
இந்தியாவில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் பிக்கானர்வாலா கிளைகள் திறக்கப்பட்டன. அங்கும் மக்களிடையே பெருத்த ஆதரவை பிக்கானர்வாலா பட்சணங்கள் பெற்றன.
இந்தியாவில் 60 கடைகளும் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, நியூஜிலாந்து, சிங்கப்பூர், நேபாளம் உள்பட பல நாடுகளில் பிக்கானர்வாலாவின் கிளைகள் தொடங்கப்பட்டன. இப்போது அவர்களது நிகர விற்றுமுதல் ரூ.1300 கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications