கர்நாடகாவில் ரூ.70 வரை உயர்ந்த ஆட்டோ கட்டணங்கள்.. பைக் டாக்ஸி தடையால் பயணிகள் கடும் பாதிப்பு..!!

பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை அலுவலகம் செல்வோருக்கு பெரும் உதவியாக இருந்து வருகின்றன. ஆனால், பைக் டாக்சி சேவையை தவறாக பயன்படுத்துவது, பெண் பயணிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளால், கடந்தாண்டு பைக் டாக்ஸி சேவைக்கு கர்நாடக அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கில் கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய மறுத்து, ஜூன் 16ஆம் தேதி முதல் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மீதான மேல்முறையீடு மனு ஜூன் 24ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அதுவரை பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ரூ.70 வரை உயர்ந்த ஆட்டோ கட்டணங்கள்.. பைக் டாக்ஸி தடையால் பயணிகள் கடும் பாதிப்பு..!!

ஆனால், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தங்களது செயலியில் பைக் டாக்ஸி சேவையை, பார்சல் சேவை (Bike Parcel/ Moto Courier) எனப் பெயர் மாற்றி தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகின்றன. சட்டத்தின் படி பைக் டாக்ஸி ஓட்டத்தான் தடை என்றும் பார்சல் சேவைகளுக்குத் தடை இல்லை என்றும் கூறி வருகின்றனர்.பைக் டாக்ஸி நிறுவனங்களின் இந்தச் செயலை அந்நிறுவனங்களின் செயலிகளில் புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம் : இந்நிலையில் தான், கர்நாடகாவில் ஆட்டோ கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. பைக் டாக்ஸுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பலரும் ஆட்டோவை நாடுகின்றனர். டெக்கான் ஹெரால்டு பத்திரிகையின்படி, திங்கள் மாலை முதல் செவ்வாய் வரை, ஆட்டோ கட்டணம் ரூ.10 முதல் ரூ.70 வரை உயர்ந்திருப்பதாகவும், இது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளது.

கர்நாடகாவில் ரூ.70 வரை உயர்ந்த ஆட்டோ கட்டணங்கள்.. பைக் டாக்ஸி தடையால் பயணிகள் கடும் பாதிப்பு..!!

தகவல் தொடர்பு நிபுணரான சோய்பம் ஜெயானந்தா சிங் கூறுகையில், உபெரில் இந்த உயர்வு மிக அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கோரமங்கலாவில் இருந்து லாங்ஃபோர்டு சாலை வரை நான் பயணிப்பதாகவும், பொதுவாக கட்டணம் ரூ.140 - ரூ.150 இருக்கும் என்றும் ஆனால் செவ்வாய்க்கிழமை முதல் அது ரூ.200-க்கு மேல் உயர்ந்திருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். அதேபோல், மற்றொரு பயணி அக்‌ஷய்நகரில் இருந்து எம்ஜி சாலை வரை 11 கி.மீ பயணத்திற்கு ரூ.230 செலுத்தியுள்ளார். ஆனால், வழக்கமாக ரூ.160 - ரூ.170 என்ற வரம்பில் தான் முன்பு இருந்துள்ளது.

திடீர் கட்டண உயர்வு ஏன்..?: தேவைகள் அதிகரிப்பதே, இந்த விலை உயர்வுக்கு காரணம் என்றும் பைக் டாக்ஸிகள் இனி இயங்காது என்பதால், அதிகமான மக்கள் ஆட்டோக்களை முன்பதிவு செய்வதாகவும், இதனால், விலை உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்ட நடவடிக்கை எடுக்கலாம் : இதுபோன்ற அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதை எதிர்கொள்ளும் பயணிகள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்ட நிபுணர் வழக்கறிஞர் இந்திரா தனுஷ் கூறியுள்ளார். மேலும், இந்த கட்டண உயர்வு நியாயமற்றது என்று தெரிவித்துள்ளார். இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படும் பயணிகள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் பிரிவு 2(47) இன் கீழ், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை நீதிமன்றத்தில் முறையிடலாம்" என்று தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+