பெங்களூரு: சென்னை ,பெங்களூரு போன்ற நகரங்களில் தங்கி வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு எல்லாம் பைக் டாக்ஸிகள் பெரும் உதவியாக இருந்தன. அதாவது தினம்தோறும் ஆட்டோ அல்லது வாடகை காருக்கு அதிக கட்டணம் செலுத்த முடியாமல், அரசு பேருந்துகளில் கூட்ட நெரிசலில் போக்குவரத்து நெரிசலிலும் சிக்காமல் தப்பிப்பதற்கு பைக் டாக்ஸிகள் வரப்பிரசாதமாக அமைந்தன.
ஆட்டோவிற்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தில் பாதி கட்டணம் கொடுத்தாலே நாம் நினைக்கும் இடத்திற்கு பயணம் செய்து விட முடியும். பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் பிரச்சனையும் இருக்காது. ஆனால் ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் கொண்டு வந்த இந்த பைக் டாக்ஸி சேவை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்த வந்தது.

இந்த சூழலில் தான் கர்நாடக மாநில அரசு பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்தது. இது பெங்களூரு நகரில் தங்கி பணிபுரியும் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் பலரும் பைக் டாக்ஸி தடையால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பதிவு செய்து வருகின்றனர். அரசின் இந்த தடை காரணமாக தங்களுடைய செலவு பல மடங்கு உயர்ந்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.
கிருஷ்ணா என்பவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் பைக் டாக்ஸியை நீங்கள் தடை செய்து விட்டீர்கள் இதன் காரணமாக நான் அலுவலகத்திற்கு ஆட்டோவில் சென்று வர வேண்டி இருக்கிறது ஒரு நாளைக்கு நான் ஆட்டோவில் அலுவலகம் சென்று வருவதற்கு 700 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கிறது. இது இந்தியாவின் தனி நபர் வருமானத்திற்கு சமம் என கூறியுள்ளார். தற்போது ஓலா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு ஜீரோ கமிஷன் என்ற மாடல் நடைமுறையில் இருக்கிறது அப்படி இருந்தும் ஏன் ஆட்டோ கட்டணங்கள் குறையவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு பயனர் பெங்களூருவில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மோசமானதாக இருக்கிறது, தற்போது அரசு பைக் டாக்ஸிக்கும் தடை விதித்திருக்கிறது. இதன் காரணமாக ஆட்டோ கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன என குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எந்த போட்டியாளர்களும் இல்லை என்பதால் அவர்கள் இஷ்டத்திற்கு ஒரு விலையை சொல்லி எங்களிடம் வசூல் செய்கிறார்கள் அரசு இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றொரு பயனர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒரு பயனர் காலை எட்டு மணி கூட இன்னும் ஆகவில்லை அதற்குள் பெங்களூரு திணறுகிறது பைக் டாக்ஸிக்கு தடை விதித்ததால் நான் ஆட்டோவில் செல்கிறேன் ஒரு நகரத்தை இப்படியா மாற்றுவது என கேள்வி எழுப்பி இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களின் குமுறல்களை பதிவிட்ட பண்ணம் இருக்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications