இந்தியாவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம்.. நான் அவசரப்படவில்லை - டிரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம், இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். குறிப்பாக இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்தார். இதனால் அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதற்கிடையே, இந்தியா-அமெரிக்கா இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

பரஸ்பர வரி
ஜூலை மாதத்துக்குள் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்யும் நோக்கில் இரு நாட்டு அதிகாரிகளும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தகம் உறுதியாகி விட்டால், டிரம்பின் பரஸ்பர வரி குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த சூழ்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தகம் விரைவில் நிறைவேறும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம்.. நான் அவசரப்படவில்லை - டிரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அவர்கள் (இந்தியா) வணிகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறார்கள். அமெரிக்க பொருட்களுக்கான கட்டணங்களை 100 சதவீதம் குறைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. இந்தியா-அமெரிக்கா இடையிலான பரஸ்பர வர்த்தகம் விரைவில் நிறைவேறும். நான் அவசரப்படவில்லை.

ஆர்வம்
எல்லோரும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். தென்கொரியா உள்பட பல நாடுகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்த விரும்பும் நாடுகளின் எண்ணிக்கை சுமார் 150ஆக இருப்பதால், நான் எல்லோருடனும் ஒப்பந்தம் செய்யத் திட்டமிடவில்லை என்று தெரிவித்தார். அந்த பேட்டியின்போது, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் எண்ணத்தில் இருப்பதையும் மேலாட்டமாக தெரிவித்தார்.

வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், எல்லாம் முடியும் வரை எதுவும் முடிவு செய்யப்படுவதில்லை. எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும். அது இரு நாடுகளுக்கும் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பியூஷ் கோயல்
மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் நிலையை மதிப்பிடுவதற்காக வாஷிங்டனில் உள்ளார். அவர் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை சந்திக்க உள்ளார்.

இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஜவுளி, ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், தோல் பொருட்கள், ஆடைகள், பிளாஸ்டிக், ரசானயங்கள், இறால், எண்ணெய் வித்துக்கள், திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் போன்ற உழைப்பு மிகுந்த தொழில் சார்ந்த பொருட்களின் வரியை குறைக்க வேண்டும் இந்தியா தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

வரி குறைப்பு
அதேசமயம், ஆட்டோமொபைல்கள் குறிப்பாக மின்சார வாகனங்கள், ஒயின்கள், பெட்ரோ கெமிக்கல்கள், பால் பொருட்கள் மற்றும் ஆப்பிள்கள் மற்றும் மரக் கொட்டைகள் போன்ற விவசாய பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் அமெரிக்கா வலியுறுத்துகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+