வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வேலை செய்யும் அளவுக்கு வேலைப் பளுவை எளிதாக்க ஒரு வழியுள்ளது என்று செயற்கை நுண்ணறிவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ்.
தென்னாப்பிரிக்க நகைச்சுவை நடிகரான ட்ரெவர் நோவாவின் What Now? என்ற "பாட்கேஸ்ட் " நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு "அச்சுறுத்தல்" பற்றி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.

மைக்ரோசாப்ட், ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடு, சாம் ஆல்ட்மேன் அளிக்கப்பட புதிய பதவி, டெக்னாலஜி பயன்பாட்டில் இரு நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தம், சாம் ஆல்ட்மேன் சத்ய நாடெல்லா-வுக்கு கொடுத்த வாக்குறுதி ஆகியவை கடந்த ஒரு வாரமாக ஏஐ துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த கேள்வி பில் கேட்ஸிடம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், பில் கேட்ஸ்-ன் செயற்கை நுண்ணறிவு பற்றிய பதில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்திவிட்டது. ஆம்... "நம்முடைய அன்றாடப் பணிகளின் சுமையை இயந்திரங்கள் செய்யும் போது மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை" என்று பில்கேட்ஸ் கூறினார்.
பில் கேட்ஸ் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது- எனது வாழ்க்கையில் 20 வருடகளுக்கு மேலாக, அதாவது 18 முதல் 40 வயது வரையில் எனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்குவதில் வெறி கொண்டு செயல்பட்டேன் (mono-maniacal). இப்போது எனக்கு 68 வயதாகிறது. வாழ்க்கையின் நோக்கம் வேலை செய்வது மட்டுமல்ல என்பதை தான் உணர்ந்துள்ளேன்.
செயற்கை நுண்ணறிவு மூலம் நீங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்தால் போதும் என்ற சமூகத்தை நீங்கள் உருவாக்க முடிந்தால் அது சரியாக தானே இருக்கும் . இன்றைய டெக் உலகில் இயந்திரங்கள், அனைத்து உணவுகளையும் பொருட்களையும் செய்ய முடியும். இதனால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. இவ்வாறு பில்கேட்ஸ் தெரிவித்தார்.
பில் கேட்ஸ் தனது முந்தைய நேர்காணல்கள் மற்றும் வலைப்பதிவுகளில் AI இன் அபாயங்கள் மற்றும் நன்மைகள் இரண்டையும் எடுத்துக்காட்டி பேசியுள்ளார். கேட்ஸ் நோட்ஸில், ஜூலை மாதம் பகிரப்பட்ட ஒரு பதிவில் AI இன் அபாயங்களைக் குறிப்பிட்டார், இதில் "AI மூலம் ஏற்படும் பாதிப்புகள் உண்மையானது, ஆனால் நிர்வகிக்கக்கூடியது" என்று தெரிவித்தார்.
AI மூலம் ஏற்படும் அபாயங்களில், தவறான தகவல் மற்றும் டீப்ஃபேக், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கல்வியின் தாக்கம் ஆகியவற்றை பில் கேட்ஸ் குறிப்பிட்டார். ஆனால் இப்போது ஆதரவு குரல் தந்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications