3ஆவது முறையாக பதவி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி.. வாழ்த்துக்களை அள்ளிக் குவித்த பில்லியனர்!

டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் பில்லியனர் பில்கேட்ஸ், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் போட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CMO அமன் குப்தா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களுடைய அதிகாரபூர்வ X தளத்தில் வாழ்த்துக்களை அள்ளி வழங்கியுள்ளனர்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். சுகாதாரம், விவசாயம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில், உலகளவில் முன்னேற்றத்திற்கான ஆதாரமாக இந்தியாவின் நிலையை மாற்றியுள்ளீர்கள்" என்று பில் கேட்ஸ் தனது அதிகாரபூர்வ X பிளாட்ஃபார்மில் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியான கூட்டணியை எதிர்பார்ப்பதாகவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

 3ஆவது முறையாக பதவி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி.. வாழ்த்துக்களை அள்ளிக் குவித்த பில்லியனர்!

கடந்த மார்ச் மாதம், இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியைச் சந்தித்து AI, தொழில்நுட்பம் மற்றும் பலவற்றைப் பற்றி பில் கேட்ஸ் பேசியது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக வரலாற்றிலேயே மிகப்பெரிய தேர்தல்களை நடத்தி முடித்து, எந்தத் தடையும் இன்றி புதிய அரசு அமைந்தது பெருமைக்குரியது. இந்திய வாக்காளர்கள் தங்களின் முக்கியமான ஜனநாயக கடமையைப் பயன்படுத்தியுள்ளனர், வாழ்த்துகள்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 543 இடங்களில் 293 இடங்களைக் கைப்பற்றி தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார். இதன் மூலம், ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3ஆவது முறையாக பதவியேற்கும் 2ஆவது பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பாதையைப் பின்பற்றி, இந்தியாவின் பொது நலனுக்காக, வளர்ச்சி பாதையை உருவாக்க இருக்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கு இந்தத் தேர்தல் காலம் உதவியது. இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வளர்க்கவும், இந்தியாவை உலக அரங்கில் பிரகாசமாகப் பிரகாசிக்கச் செய்யவும் உங்களின் வளர்ச்சிக் கொள்கைகளில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று குப்தா கூறியுள்ளார்

கூடுதலாக, Snapdeal தலைமை நிர்வாக அதிகாரி குணால் பால் கூறுகையில், பல ஆண்டுகளாக நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக இந்தியா முன் எப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது என்று கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+