முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய பிரமாண்ட விழாவில் மைக்ரோசாப்ட்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனது காதலி பவுலா ஹர்ட் உடன் கலந்து கொண்டார்.
ஜாம்நகரில் நடைபெற்று வரும் இந்த மூன்று நாள் விழாவில், முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோருடன் பில் கேட்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முன்னதாக, ஜாம்நகரில் உள்ள தனது 200 ஏக்கரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ்-ல் மூன்று நாள் விழாக்களை நடத்தி வருகிறார். இந்த விழாவில் உலக பிரபல தொழிலதிபர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
மார்ச் 1 முதல் 3 வரை இந்த திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி இரவு நடைபெற்ற விழாவின் பெயர் An Evening in Everland ஆகும். இதில் பாடகி ரியானா, ட்ரோன் ஷோ, கலாச்சாரம் காட்டிப்படுத்துலதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பில் கேட்ஸ் தனது காதலி பவுலா ஹர்ட் உடன் இந்த பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டிருப்பது, இந்த நிகழ்வுக்கு மேலும் சிறப்பூட்டியுள்ளது.

68 வயதான பில் கேட்ஸ் தனது காதலியான பவுலா ஹர்டுடனான உறவை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், இருவரின் இந்திய பயணம், அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு என அனைத்தையும் பார்க்கும் போது இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
பில் கேட்ஸ் - பவுலா ஹர்ட் ஜோடி இரண்டு வருடங்களுக்கும் மேலாக டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. அம்பானி வீட்டு விருந்துக்கு, எலிகன்ட் காக்டெய்ல் ஆடையை பவுலா ஹர்ட் அணிந்து வந்தார்.
பவுலா ஹர்ட் முன்னாள் ஆரக்கிள் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்டின் மனைவி ஆவார், கணவரின் இறப்பிற்கு பின்பு பில் கேட்ஸ் உடன் காதல்வயப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் போது இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர்.
இப்போது தான் முதல் முறையாக பில் கேட்ஸுடனான அவரது உறவு குறித்த பேச்சுகள் வெளியானது. இருவரும் தீவிர டென்னிஸ் ரசிகர்கள், மார்ச் 2022 இல் நடந்த இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் WTA அரையிறுதிப் போட்டியில் ஒன்றாக அமர்ந்திருக்கும் படமும் அப்போது டிரெண்டானது.
ஜூலை 2023 இல், பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் வைர மோதிரத்தை அணிந்திருப்பதைக் கண்ட பிறகு, அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வதந்திகள் வெளிவந்தன. ஆனால் பில் கேட்ஸ் செய்தித் தொடர்பாளர் இதை நிராகரித்தார்.
பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸிடமிருந்து விவாகரத்து ஆகஸ்ட் 2021 இல் இறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் அவ்வப்போது நெருங்கியிருக்கும் புகைப்படம் டிரெண்டானது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications